உள்ளடக்கத்துக்குச் செல்

வி. பி. சிந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. பி. சிந்தன் (V. P. Chinthan) (பிறப்பு: சிண்டன் 10 அக்டோபர் 1918 - 8 மே - 1987) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார்.

வாழ்கை

[தொகு]

இவர் 1918 அக்டோபர் 10 அன்று சென்னை மாகாணம், மலபார் மாவட்டத்தின், இலையாவூர் கிராமத்தில் செரியம்மா, சாந்துநாயர் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது அக்காள் தேவகியும், அண்ணனும், அண்ணியும் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தனும் அவர்களைப் பின்தொடர்ந்து காந்தியியன் அழைப்பே ஏற்று கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனையைப் பெற்றார்.

பொதுவுடமை இயக்கத்தில்

[தொகு]

1934இல் காங்கிரசு சோசலிசக் கட்சி தொடங்கப்பட்டபோது இவர் அதில் இணைந்து மலபார் பகுதியில் இடதுசாரி இயக்கத்தவர்களுடன் இணைந்து பணியாற்றினார். போர் எதிர்ப்பு பரப்புரையில் ஈடுபட்டதற்காக சித்தன் 1939இல் இரண்டு ஆண்டுகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு 1942இல் கட்சிப் பணியாற்றுவதற்காக தமிழகம் வந்தார். இந்திய பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டதால் 1948இல் மூன்றாண்டுகள் சிறைவைக்கப்பட்டார். புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டபோது பாரதிதாசனுடன் நட்பு ஏற்பட்டது. இவரது மலையாளப் பெயரான சிண்டன் என்ற பெயரை சிந்தன் என்று பாரதிதாசன் மாற்றினார்.[1]

1966இல் போக்குவரத்துக் தொழிலாளர் ச்கத்தை சென்னையில் தொடங்கியதில் இவரது பங்கு முதன்மையானதாகும். இவர் வில்லிவாக்கம் சட்டமன்றத்தொகுதியில் இருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக 1984 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

குடும்பம்

[தொகு]

அரசியல் வாழ்வில் தீவிரமாக இயங்கியதால் இவர் தன் 40வயதில் சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

மறைவு

[தொகு]

1987இல் மாசுகோவில் நடைபெற்ற மே நாள் அணிவகுப்பை பார்வையிடச் சென்றவர் 1987 மே 8 அன்று ஸ்டாலின்கிராடில் மாரடைப்பால் காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. க. உதயகுமார் (8 மே 2019). "மொத்த வாழ்வும் பாட்டாளிக்கு". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 மே 2019.
  2. கே. சந்துரு (8 மே 2019). "பேராசான் வி. பி. சிந்தன்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 மே 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._சிந்தன்&oldid=3578246" இலிருந்து மீள்விக்கப்பட்டது