வி. டி. கிருஷ்ணமாச்சாரி
வாங்கல் திருவேங்கடாச்சாரி கிருஷ்ணமாச்சாரி | |
---|---|
இந்தியத் திட்டகுழுத் துணைத் தலைவர் | |
பிரதம அமைச்சர், ஜெய்பூர் இராச்சியம் | |
பதவியில் 1946–1949 | |
பிரதம அமைச்சர், பரோடா இராச்சியம் | |
பதவியில் 1927–1944 | |
ஆட்சியாளர் | மூன்றாம் சயாஜிராவ் கெயிக்வாட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 பிப்ரவரி 1881 வாங்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 14 பெப்ரவரி 1964 சென்னை, இந்தியா | (அகவை 83)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ரங்கம்மாள் |
பிள்ளைகள் | வேதம்மாள் கோபால அய்யங்கார் வி. கே. திருவேங்கடச்சாரி, வி. கே. ரங்கசாமி, ஜெயம்மாள் ஸ்ரீநிவாசன், வி. கே. ராமசாமி (1928–1969) |
முன்னாள் கல்லூரி | மாநிலக் கல்லூரி, சென்னை, சென்னை சட்டக் கல்லூரி |
வேலை | வழக்கறிஞர், அரசு உயர் அலுவலர் & அரசியல்வாதி |
வாங்கல் திருவேங்கடாச்சாரி கிருஷ்ணமாச்சாரி அல்லது வி. டி. கிருஷ்ணமாச்சாரி (Vangal Thiruvenkatachari Krishnamachari) (8 பிப்ரவரி 1881 – 14 பிப்ரவரி 1964), சட்டப் படிப்பு மற்றும் இந்தியக் குடியியல் பணிகள் முடித்த இவர், பரோடா இராச்சியத்தின் பிரதம அமைச்சராக 1927 முதல் 1944 வரையிலும்[1], பின்னர் ஜெய்பூர் இராச்சியத்தின் பிரதம அமைச்சராக 1946 முதல் 1949 முடிய பனியாற்றியவர். மேலும் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர்.[2]
பின்னர் 1961 முதல் 1964 முடிய இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர்.
இளமை
[தொகு]தற்கால கரூர் மாவட்டத்தின், வாங்கல் கிராமத்தில் 8 பிப்ரவரி 1881ல் பிறந்த தி. கிருஷ்ணமாச்சாரி, பள்ளிப் படிப்பை வாங்கல் கிராமத்திலும், கல்லூரி மற்றும் பட்டப்படிப்பை முறையே, மாநிலக் கல்லூரி, சென்னை, சென்னை சட்டக் கல்லூரியிலும் முடித்தவர்.
இந்தியக் குடியியல் பணிகள்
[தொகு]இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற வி. டி. கிருஷ்ணமாச்சாரி, 1913 முதல் 1919 முடிய சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] வருவாய்த் துறையின் கூடுதல் செயலாளாராகவும், பின்னர் விஜயநகரம் எஸ்டேட்டின் காப்பாளராக 1919 முதல் 1922 முடிய பணியாற்றினார்.
சுதேச சமஸ்தானங்களின் பிரதிநிதி
[தொகு]பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த அனைத்து சுதேச சமஸ்தானங்களில் ஒன்றான ஜெய்பூர் இராச்சியத்தின் சார்பாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
படைப்புகள்
[தொகு]- V. T. Krishnamachari (1949). Speeches of V. T. Krishnamachari, Diwan, Jaipur State. Information Bureau.
- V. T. Krishnamachari (1952). Report on Indian and State Administrative Services and Problems of District Administration. Government of India.
- V. T. Krishnamachari (1958). Community Development in India. Government of India.
- V. T. Krishnamachari (1959). Planned Development and Efficient Administration. Government of India.
- V. T. Krishnamachari (1961). Planning in India. Orient Longman.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Vijay Kumar (2011). Integrated Rural Development Program and Its Impact on the Socio-Economic Condition of the Rural Poor of Sitamarhi District. Xilbris Corporation. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4568-4699-2.
- ↑ Constituent Assembly Debates, Session 3, 28 April 1947.