வி. செந்தில் பாலாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வி. செந்தில் பாலாஜி தமிழக அரசியல்வாதிகளில் ஒருவர். கரூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]. 2011 இல் நடந்த 14வது சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் வெற்றி பெற்ற இவர் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.[2]. 2006ஆம் ஆண்டுத் தேர்தலிலும் இவர் அதிமுக கட்சியில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இளமைக் காலம்[தொகு]

வி. செந்தில்குமார் என்னும் இயற்பெயரை உடைய வி. செந்தில்பாலாஜி,[3] என மாற கரூர் மாவட்டத்தில் கரூருக்கு அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்து, வளர்ந்தார்.

கல்வி[தொகு]

கரூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்புத் தேறிய அவர், கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்ந்தார். அரசியல் ஆர்வத்தின் காரணமாக அப்படிப்பை 16.4.1995ஆம் நாள் இடைநிறுத்தம் செய்துவிட்டார். [3]

குற்றச்சாட்டு[தொகு]

ஆனால் தான் பி.காம் பெற்றதாக தனது கட்சியின் தலைமைக்கு தெரியாமல் மறைத்தார் என்றும் சட்டசபை ஆவணங்களில் பி.காம் தேறியதாக பதிந்தார் என்றும் இவர் மீது குற்றச்சாட்டு உண்டு. ஆனால் 2011ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலின்பொழுது தனது வேட்புமனுவில் படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டு உள்ளார். [3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

பட்டப்படிப்பை 1995ஆம் ஆண்டில் இடைநிறுத்தம் செய்த செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். 2000மார்ச் 13ஆம் நாள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் அவர் முன்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.[3]

வகித்த பதவிகள்[தொகு]

கட்சிப் பதவிகள்[தொகு]

 • 2000 செப்டம்பரில் அ.தி.மு.க.வின் கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். [3]
 • 2004ஆம் ஆண்டு அதே கட்சியின் கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆனார். [3]
 • 2007 மார்ச் 11ஆம் நாள் கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆனார். [3]
 • 2007 மார்ச் 21ஆம் நாள் கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஆனார்.[3]
 • 2015 சூலை 27ஆம் நாள் கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். [4]

அரசாங்கப் பதவிகள்[தொகு]

 • 1996ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]
 • 2006ஆம் ஆண்டில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். [3]
 • 2006 மே 16ஆம் நாள் முதல் 27 சூலை 2015 முடிய தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியில் இருந்தார். [3]

பதவி நீக்கம்[தொகு]

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பிலிருந்தும், கரூர் மாவட்ட அதிமுக செயலர் பொறுப்பிலிருந்தும் 27 சூலை 2015இல் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.[5][4][6]

விமர்சனங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
 2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
 3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 ஆனந்த விகடன்,29.4.2015., மந்திரி தந்திரி! கேபினெட் கேமரா:1 அமைச்சர் செந்தில்பாலாஜி, போக்குவரத்துத் துறை, பக்.28-34
 4. 4.0 4.1 த இந்து மின்னிதழ் 2015 சூலை 27
 5. த இந்து மின்னிதழ் 2015 சூலை 27
 6. http://www.dinamalar.com/news_detail.asp?id=1305743
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._செந்தில்_பாலாஜி&oldid=2208453" இருந்து மீள்விக்கப்பட்டது