வி. சி. பழனிச்சாமி கவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி.சி.பழனிசாமி கவுண்டர் (V. C. PalanisamiGounder) இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு மாநிலத்தின் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்த இவர் சி. இராசகோபாலச்சாரி அமைச்சரவையில் மதுவிலக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். கே.காமராசர் அமைச்சரவையில் கால்நடை பராமரிப்பு மற்றும் ஆதி திராவிடர் நல அமைச்சராக இருந்தார்.

சுயசரிதை[தொகு]

வி.சி.பழனிசாமி கவுண்டர் கோயம்பத்தூரில் வசதியான நெசவு வியாபாரிகளின் குடும்பத்தில் பிறந்தார். 1937 ஆம் ஆண்டில், மாநிலத்தின் பருத்தி விவசாயிகள் பிரதிநிதியாக சட்டப் பேரவைக்கு கவுண்டர் நியமிக்கப்பட்டார்.1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Madras Legislative Assembly - Third Assembly" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம்.