உள்ளடக்கத்துக்குச் செல்

வி. சி. கோவிந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. சி. கோவிந்தசாமி என்பவர் ஒரு இந்திய தமிழ் அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 1971, 1989 தேர்தல்களில் காவிரிப்பட்டினம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2] மேலும் இவர் ஒரு மொழிப்போர் தியாகி ஆவார்.

அவர் 2007 முதல் 2011 வரை மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவராக இருந்தார்.

சாதனைகள்

[தொகு]
  • இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம் 1973 மே மாதம் நிறுவப்பட்டது
  • போச்சம்பள்ளியில் சூரியகாந்தி எண்ணெய் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டது
  • பல்வேறு பள்ளிக்கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டன.
  • ஆறு உழவர் சந்தைகள் இவர் வேளாண்மை விற்பனைக்குழு தலைவராக இருந்தபோது திறக்கப்பட்டது.
  • கிருஷ்ணகிரியில் பால் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டது.
  • முதன்முதலில் பையூரில் மாங்கூழ் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இவரது முயற்சியால் நிறுவப்பட்டது.
  • 1970களின் இறுதியில் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் இருந்த நக்சல் பாரி இயக்கத்தினர் பலர் திருந்தி ஜனநாயக வழியில் வாழ்ந்திட பெரிதும் உதவினார்.

வகித்த பதவிகள்

[தொகு]
  • ஊராட்சி தலைவர்
  • சட்டமன்ற உறுப்பினர்
  • மாவட்ட அமைதிக்குழு உறுப்பினர்
  • கோவை வேளாண்மை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை (Syndicate) உறுப்பினர்
  • மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு தலைவர்[3]
  • மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி துறை தலைவர்
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்
  • பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்
  • மொழிப்போர் தியாகி

கடசியில் வகித்த பதவிகள்

[தொகு]
  • கிளைக்கழக செயலாளர்
  • ஒன்றிய செயலாளர்
  • மாவட்ட துணை செயலாளர்
  • பொதுக்குழு உறுப்பினர்
  • செயற்குழு உறுப்பினர்

குறிப்புகள்

[தொகு]
  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-27.
  2. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-27.
  3. "Appointed". The Hindu (in Indian English). 2007-07-24. Retrieved 2021-06-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சி._கோவிந்தசாமி&oldid=4226141" இலிருந்து மீள்விக்கப்பட்டது