வி. கோ. விசுமயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வி. கே. விசுமயா
V. K. Vismaya
தனித் தகவல்கள்
முழுப் பெயர்வெல்லுவ கொரத் விசுமயா
பிறந்த நாள்14 மே 1997 (1997-05-14) (அகவை 23)
பிறந்த இடம்சிறீகந்தபுரம், கண்ணூர் மாவட்டம், கேரளம், இந்தியா[1]
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)400 மீட்டர்கள்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை
400 மீ - 52.12 (2019)
 
பதக்கங்கள்
 இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கம் 2018 ஜாகர்த்தா பெண்கள் 4 × 400 மீட்டர்கள்
ஆசிய சாம்பியன்
வெள்ளி 2019 தோகா பெண்கள் 4 × 400 மீட்டர்
வெள்ளி 2019 தோகா கலப்பு 4 × 400 மீட்டர்கள்

வெல்லுவா கொரத் விசுமயா (Velluva Koroth Vismaya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓட்டப்பந்தய வீராங்கனையாவார். 1997 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி இவர் பிறந்தார். 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் விசுமயா சிறப்புத் தகுதி பெற்றவராவார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் பங்கெடுத்து தங்கம் வென்ற இந்திய பெண்களில் இவரும் ஒரு வீராங்கனையாக இடம்பெற்றிருந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன் பட்டப் போட்டிகளில் பெண்களுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அதே போட்டியின் 4×400 மீட்டர் கலப்பு வீரர்கள் பிரிவிலும் இவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

வி.கே விசுமயா கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் 1997 ஆம் ஆண்டு பிறந்தார்.வி.கே விசுமயாவின் தந்தை ஒரு மின்சார பணியாளர். தாயார் ஓர் இல்லத்தரசி. உயர்கல்வி படித்து எதிர்காலத்தில் ஒரு பொறியாளராகவும், கல்வி உலகில் தொடர்ந்து சஞ்சரிக்கவும் இவர் விரும்பினார். ஆனால் தடகளப் பயிற்சியில் இருந்த அவரின் சகோதரி விதிசாவைப் போலவே தடகள விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கினார்.

வெற்றிகள்[தொகு]

  1. 2013 ஆம் ஆண்டு கொத்தமங்கலம் செயிண்ட் சியார்ச்சு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் போது தென்னிந்திய அளவில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.
  2. 2017ஆம் ஆண்டு அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சாம்பியன் பட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அதே போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
  3. 2019 ஆம் ஆண்டு செக் குடியரசின் புரோனோ நகரில் நடந்த தடகள சந்திப்பில் 400 மீட்டர் ஓட்டத்தை 52.12 வினாடிகளில் ஓடி தங்க பதக்கம் வென்றுள்ளார்.[3]
  4. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 59 ஆவது தேசிய திறந்தநிலை தடகளப் போட்டிகளில் 400 மீ ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.[4]
  5. 2021 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கோ._விசுமயா&oldid=3108433" இருந்து மீள்விக்கப்பட்டது