உள்ளடக்கத்துக்குச் செல்

வி. கே. ஹைமாவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. கே. ஹைமாவதி
பிறப்பு12 அக்டோபர் 1955 (1955-10-12) (அகவை 70)
திருச்சூர் மாவட்டம், கேரளம்
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்கலாமண்டலம் ஹைமாவதி
பணிநடனக் கலிஞர், நடன ஆசிரியர்
அறியப்படுவதுஇந்தியப் பாரம்பரிய நடனங்கள்/ மோகினியாட்டம்
பெற்றோர்கிருஷ்ண வாரியர்
பார்வதி
வாழ்க்கைத்
துணை
Chandrasekharan
பிள்ளைகள்1
விருதுகள்சங்கீத நாடக அகாதமி விருது
கேரள சங்கீத நாடக அகாதமியின் குரு பூஜை விருது
கேரள சங்கீத நாடக அகாதமி விருது

கலாமண்டலம் ஹைமாவதி (Kalamandalam Hymavathy) என்று பிரபலமாக அழைக்கப்படும் வி. கே. ஹைமாவதி இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மோகினியாட்ட நடனக் கலைஞரும் நடன ஆசிரியரும் ஆவார். சங்கீத நாடக அகாதமி விருது, கேரள சங்கீத நாடக அகாதமியின் குருபூஜை விருது மற்றும் கேரள சங்கீத நாடக அகாதமி பரிசு உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

திருச்சூர், பெரிங்கோடைச் சேர்ந்த கிருஷ்ண வாரியர் மற்றும் மச்சாடைச் சேர்ந்த பார்வதி ஆகியோருக்கு அக்டோபர் 12,1955 அன்று வி. கே. ஹைமாவதி பிறந்தார்.[1] இவரின் தந்தை ஒரு மருத்துவர். இவருக்கு ஒரு வயதாக இருந்தபோது இவரது குடும்பம் செருத்துருத்திக்கு குடிபெயர்ந்தது. தனது ஐந்து வயதில், சந்திரிகா என்பவரின் கீழ் நடனத்தையும், சங்கரநாராயணன் ஆசானின் கீழ் கதகளியையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.[1] தனது 12 வயதில் தனது சகோதரி ருக்மிணியுடன் கேரள கலாமண்டலத்தில் நடனம் ஆடினார். பின்னர், கலாமண்டலம் சத்தியபாமா, லீலாமணி மற்றும் சந்திரிகா ஆகியோரின் கீழ் நடனம் கற்க கலாமண்டலத்தில் சேர்ந்தார். மேலும் 16 வயதில் தனது சான்றிதழ் படிப்பை முடித்தார்.[1]

திருமணத்திற்குப் பிறகு, 19 வயதில் கொல்கத்தாவிற்குக் குடிபெயர்ந்தார். ஆனால் கலாமண்டலத்தில் மோகினியாட்டம் கற்பிக்கும் ஆசிரியராக வேலை கிடைத்தவுடன் கேரளாவுக்குத் திரும்பினார்.[1] கலாமண்டலத்தில் பணிபுரிந்தபோது, ஹைமவதி கலாமண்டலம் ஹேமாவதியின் கீழ் குச்சிப்புடி நடனம் படித்தார்.[1] 33 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு, மோகினியாட்டம் துறையின் தலைவராக கலாமண்டலத்தில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் காலடி சமசுகிருதப் பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக சேர்ந்தார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவருக்கு ஒரு மகன் உள்ளார்.[1] இவர்கள் திருச்சூர் மாவட்டம், செருதுருத்தியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசாதனம் என்ற தங்கள் வீட்டில் வசிக்கின்றனர்.[1]

இவரது வழிகாட்டுதலின் கீழ், நாராயணகுரு எழுதிய தெய்வதசகம் என்ற பிரார்த்தனைக் கவிதை 1500 நடனக் கலைஞர்களால் மோகினியாட்டம் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது.[2]

மோகனம் மற்றும் சோல்கெட்டு ஆகியவை ஹைமாவதி மற்றும் அவரது நடன வாழ்க்கையைப் பற்றி தயாரிக்கப்பட்ட இரண்டு ஆவணப்படங்கள் ஆகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._ஹைமாவதி&oldid=4447862" இலிருந்து மீள்விக்கப்பட்டது