வி. கே. திருவேங்கடாச்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்கல் கிருஷ்ணமாச்சாரி திருவெங்கடாச்சாரி
சென்னை மாநிலத்தின் அரசு தலைமை வழக்கறிஞர்
பதவியில்
1950–1964
முன்னையவர்கே. ராஜா ஐயர்
பின்னவர்என். கிருஷ்ணசாமி ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சனவரி 1904
இறப்பு23 சனவரி 1984(1984-01-23) (அகவை 79)

வங்கல் கிருஷ்ணமாச்சாரி திருவெங்கடாச்சாரி (Vangal Krishnamachari Thiruvenkatachari ) (30 சனவரி 1904 - 23 சனவரி 1984) என்பவர் இந்திய வழ்கறிஞராவார். இவர் 1951 முதல் 1964 வரை சென்னை மாநிலத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் ஐ.சி.எஸ் அதிகாரியான சர் வி. டி. கிருஷ்ணமாச்சாரியின் மூத்த மகனாவார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் திருவரங்கத்தில் வி. டி. கிருஷ்ணமாச்சாரி மற்றும் ரங்கம்மல் இணையருக்கு மகனாக 1904 சனவரி 30 அன்று பிறந்தார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார் . கல்வியை முடித்ததும் எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றும் சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ஆகியோரிடம் பயிற்சி வழக்கறிஞராக இருந்தார். 1950 ஆம் ஆண்டில், புதிதாக அமைக்கப்பட்ட இந்திய குடியரசில் நிறுவனங்கள் சட்டம் குறித்து இவரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

பிற செயல்பாடுகள்[தொகு]

வழக்கறிஞர் பணிகளைத் தவிர, விவேகானந்தா கல்லூரி, வித்யா மந்திர், மற்றும் தன்னார்வ சுகாதார சேவை ஆகியவற்றை நிறுவுவதில் திருவென்கட்டாச்சாரி முக்கிய பங்கு வகித்தார்.

குடும்பம்[தொகு]

திருவெங்கடாச்சாரி பத்மினி என்பவரை மணந்தார் (1910-1995). இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன:

  • சீதா நரசிம்மன்
  • டி. கிருஷ்ணன்

குறிப்புகள்[தொகு]

  • "Descendants of Satagopa Iyengar". V. L. Vijayaraghavan.