வி. கல்யாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வி. கல்யாணம் (V Kalyanam) என்பவர் ஒர் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார். 1920 ஆம் ஆண்டில் பிறந்த இவர் காந்தியின் வாழ்க்கையில் கடைசி சில ஆண்டுகள் அவருடைய நேர்முகச் செயலாளராக இருந்தார்.[1][2]. 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்து கொண்டிருந்தபோது கல்யாணம் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார்.[3] இணைந்த நாள் முதல் கடைசியாக காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டது வரை இவர் காந்தியடிகளிடம் தொடர்து பணிபுரிந்தார். நாதுராம் கோட்சே காந்தியடிகளை சுட்டபொழுது கல்யாணம் காந்தியடிகளுக்குச் சற்று பின்புறமாகத்தான் நின்று கொண்டிருந்தார்.[4] சுடப்பட்டவுடன் காந்தி இறந்து போனார், முழுமையாக ’ஹே ராம்’ என்ற சொற்களையே அவர் கடைசியாக உச்சரித்தார் என்று வி. கல்யாணம் குறிப்பிடுகிறார்.[4] நேருவுக்கும் வல்லபாய் பட்டேலுக்கும் காந்தியின் இறப்பைக் குறித்து முதலில் தகவல் கொடுத்தவர் இவரே ஆகும்.[5]

பின்னாளில், கல்யாணம் எட்வினா மவுண்ட்பேட்டனுக்குச் செயலாளராக இலண்டனில் பணிபுரிந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவிற்குத் திரும்பிய இவர் இராசகோபாலாச்சாரி மற்றும் செயப்பிரகாசு நாராயணன் ஆகியோருக்காகப் பணிபுரிந்தார்.[3]

காந்தியடிகளின் தியாகத்தை காங்கிரசு கட்சி மறந்து விட்டது என்று கல்யாணம் விமர்சனம் செய்தார்.[2][6] கட்சியில் ஊழல் மலிந்துவிட்டதால் காங்கிரசு கட்சி கலைக்கப்பட வேண்டும் என்று காந்தி விரும்பியதாக இவர் தெரிவித்தார்[7]. மேலும், இந்தியாவில் ஊழல் பெருகியதற்கு சவகர்லால் நேருவே பொறுப்பு எனவும் அவர் கூறினார்.[8]

2014 ஆம் ஆண்டில் வி.கல்யாணம் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கல்யாணம்&oldid=2339695" இருந்து மீள்விக்கப்பட்டது