வி. கருப்பசாமி பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வி. கருப்பசாமி பாண்டியன்
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
பணி அரசியல்வாதி

வி. கருப்பசாமி பாண்டியன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்குமிக்க தலைவராக பணியாற்றிய இவர், தற்போது திமுகவில் உள்ளார். 

வாழ்கை[தொகு]

பாண்டியன் அதிமுக நிறுவனரும் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான ம. கோ. ராமச்சந்திரனின் ஆதரவாளராக இருந்தார். ராமச்சந்திரனாலும் அதன்பிறகு கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா ஆகிய இருவராலும் 1972 இல் இருந்து கட்சியில் பல்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டார். 1996 இல் இவர் கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.[1]

1977 தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் இருந்து அதிமுக வேட்பாளராக பாண்டியன் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு தேர்தல்களில் பாளையங்கோட்டை தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

பின்னர் மே 2, 2000 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அந்த கட்சியில் பல்வேறு பதவிகள் வகித்தார். 2006 தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3]

2015 ஆம் ஆண்டு மே மாதம் திமுகவில் இருந்து தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், சூலை 26, 2016 இல் ஜெயலலிதாவின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். திசம்பர் 2016 இல் அவரது மரணத்திற்குப் பின்னர், வி. கே. சசிகலா அவரை கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமித்தார். பின்னர் வி. கே. சசிகலா, தினகரனை கட்சியின் துணைத் தலைமைச் செயலாளராக அறிவித்தார். 2011 இல் ஜெயலலிதாவுக்கு 'துரோகம்' செய்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை கட்சியின் உயர் பதவியில் நியமிப்பதை என்னால் தன்னால் முடியாது என்று கூறி தன் பதவியை ராஜினாமா செய்தார்.[4] கருணாநிதியின் மறைவையடுத்து திமுக தலைவராக மு. க. ஸ்டாலின் ஆன பிறகு 2018, ஆகத்து 31 அன்று மீண்டும் திமுகவில் இணைந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]