வி. எஸ். ஆர். சுவாமி
வி. எஸ். ஆர். சுவாமி | |
---|---|
பிறப்பு | வில்வாத்ரிபாடு, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | சூலை 15, 1935
இறப்பு | நவம்பர் 11, 2008 மச்சிலிப்பட்டணம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | (அகவை 73)
தேசியம் | ![]() |
பணி | ஒளிப்பதிவாளர், இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1960s–2008 |
வி. எஸ். ஆர். சுவாமி (K S R Swamy; ஜூலை 15,1935-நவம்பர் 11,2008) தெலுங்குத் திரைப்படத்துறையில் தனது பணிக்காக அறியப்பட்ட ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். நான்கு தசாப்தங்களாக நீடித்த தனது தொழில் வாழ்க்கையில், சுமார் 250 படங்களில் பணியாற்றிய சுவாமி, தொழில்துறையில், குறிப்பாக வண்ண ஒளிப்பதிவு, சினிமாஸ்கோப் மற்றும் 70 மிமீ வடிவங்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.[1]
சுவாமி, கருப்பு வெள்ளை மற்றும் வண்ண ஒளிப்பதிவு இரண்டிலும் திறமையானவராக இருந்தார். பல மைல்கல் தெலுங்குப் படங்களை வடிவமைத்தார். மொசகல்லக்கு மொசகாடு (1971), அல்லூரி சீதாராம ராஜு (1974), சிரி சிரி முவ்வா (1976), கைதி (1983), சிம்ஹாசனம் (1986), ஆதித்யா 369 (1991), நரசிம்ம நாயுடு (2001), மற்றும் இந்திரா (2002) ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் சில. விஸ்வநாத நாயக்குடு (1987) படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான நந்தி விருதைப் பெற்றுள்ளார்.[2]
ஒளிப்பதிவாளராக தனது பணிக்கு கூடுதலாக, சுவாமி தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படங்களை இயக்கி தயாரித்தார். இவர் பல வளர்ந்து வரும் ஒளிப்பதிவாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்து, தொழில்துறையில் அடுத்த தலைமுறை திறமையாளர்களுக்கு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். [3]
வாழ்க்கையும் தொழிலும்
[தொகு]வி. எஸ். ஆர்.சுவாமி ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், குடிவாடா மண்டலம், வலிவர்த்திபாடு கிராமத்தில் பிறந்தார். [4] இவர் சிறு வயதிலிருந்தே ஒளிப்படம் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். மேலும் சி. நாகேஸ்வர ராவ் என்பவரது வழிகாட்டுதலின் கீழ் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், ரவிகாந்த் நாகைச் மற்றும் எஸ். சங்கர் போன்ற புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களுடன் பணியாற்றினார். சுவாமி ஆரம்பத்தில் பந்திபோட்டு (1963) மற்றும் வீரபிமன்யு (1965) போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றினார். சுவாமி விரைவாக தனது திறமையினால் முன்னேற்றம் கண்டார். மேற்கத்திய இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினரானார், இது அந்த நேரத்தில் இருந்த ஆர்வமுள்ள ஒளிப்பதிவாளர்களுக்கு ஒரு மதிப்புமிக்க சாதனையாகும். [3]
நடிகர் கிருஷ்ணா நடித்து வி. ராமச்சந்திர ராவ் இயக்கிய ஆசாத்யுடு (1968) படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். படத்தில் இவரது பணி, குறிப்பாக அவரது புதுமையான ஒளிப்பதிவை கையாளுதல், நல்ல வரவேற்பைப் பெற்றது. இது இவருக்கு தெலுங்குத் திரைப்படத் துறையில் மேலும் வாய்ப்புகளுக்கு வழிவகுத்தது. [5]
எம்.வி. ரகு, எஸ். கோபால் ரெட்டி, இராம் பிரசாத் உள்ளிட்ட பல பிரபல ஒளிப்பதிவாளர்கள் வி. எஸ். ஆர். சுவாமியின் தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இவருக்கு உதவினார்கள். எஸ். கோபால் ரெட்டி சுவாமியின் உதவியாளராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். [6] தெலுங்கு திரையுலகில் அடுத்த தலைமுறை திறமையாளர்களை வடிவமைப்பதில் சுவாமி முக்கிய பங்கு வகித்தார். கருப்பு வெள்ளை மற்றும் வண்ண ஒளிப்பதிவு இரண்டிலும் இவர் காட்டிய நிபுணத்துவத்திற்காகவும், அந்தத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு இவர் அளித்த பங்களிப்புகளுக்காகவும் சுவாமி நினைவுகூரப்படுகிறார். [3]
இறப்பு
[தொகு]சுவாமி, நவம்பர் 12, 2008 அன்று மச்சிலிப்பட்டினத்தில் மாரடைப்பு காரணமாக தனது 70வது வயதில் இறந்தார். [7] [8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "చిత్రవిచిత్రాల వి.యస్.ఆర్.స్వామి". NTV (in தெலுங்கு). 2021-07-15. Retrieved 2024-10-13.
- ↑ "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. Retrieved 21 August 2020.(in Telugu)
- ↑ 3.0 3.1 3.2 "చిత్రవిచిత్రాల వి.యస్.ఆర్.స్వామి". NTV (in தெலுங்கு). 2021-07-15. Retrieved 2024-10-13."చిత్రవిచిత్రాల వి.యస్.ఆర్.స్వామి". NTV (in Telugu). 15 July 2021. Retrieved 13 October 2024.
- ↑ "ఛాయామాంత్రికుడు వి.ఎస్.ఆర్ స్వామి మనకికలేరు". Cinegoer (in தெலுங்கு). Archived from the original on 2016-03-05. Retrieved 2015-12-26.
- ↑ "తొలి సంక్రాంతి సినిమాకు 50 వసంతాలు". Samayam (in தெலுங்கு). 12 January 2018. Retrieved 2024-10-14.
- ↑ "పాత – కొత్త తరాల వారధి ఎస్. గోపాల్ రెడ్డి". NTV (in தெலுங்கு). 2021-07-04. Retrieved 2024-10-14.
- ↑ "V. S. R. Swamy passed away". Filmibeat. 13 November 2008. Retrieved 16 January 2024.
- ↑ "Cameraman VSR Swamy". Indian Express. Retrieved 16 January 2024.