உள்ளடக்கத்துக்குச் செல்

வி. எம். ஆபிரகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. எம். ஆபிரகாம் (V. M. Abraham, பிறப்பு: 1948) என்பவர் தெலங்காணாவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் ஜோகுலாம்பா கத்பால் மாவட்டத்தில் உள்ள, பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட ஆலம்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தெலங்காணா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகப் பணியாற்றினார்.[2] இவர் தெலங்காணா இராட்டிர சமிதி கட்சியின் சார்பில் இத்தேர்தலில் போட்டியிட்டார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஆபிரகாம் தெலங்காணா மாநிலம், ஜோகுலாம்பா கத்பால் மாவட்டத்தில் உள்ள இதிகியாலா மண்டலத்தின் வல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை வெங்கடன்னா ஆவார். ஆபிரகாம் விஜயலட்சுமி என்பவரை மணந்தார். 1974ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள உசுமானியா மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பை முடித்தார்.[4][5]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

ஆபிரகாம் தனது அரசியல் வாழ்க்கையை தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடங்கினார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்ட இவர், 2009 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் ஆலம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்திய தேசிய காங்கிரசின் எஸ். ஏ. சம்பத் குமாரிடம் 6,730 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2023-இல், மீண்டும் காங்கிரசு கட்சியில் இணைந்தார், ஆனால் 2023 சட்டமன்றத் தேர்தலில் ஆலம்பூர் தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Member's Profile - Telangana-Legislature". www.telanganalegislature.org.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-05-27. Retrieved 2026-03-20.
  2. 1 2 "V.M Abraham | MLA | Vallur | Itikyal | Alampur | Jogulamba Gadwal" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-04-16. Retrieved 2026-03-20.
  3. ↑ "Alampur Election Result 2018 Live Updates: Candidate List, Winner, Runner-up MLA List". Elections in India. Archived from the original on 2021-09-06. Retrieved 2026-03-20.
  4. ↑ "అందుకే నన్ను బీదల డాక్టర్‌గా పిలిచేవాళ్లు... | MLA V M Abraham Life Story | Sakshi". www.sakshi.com (in தெலுங்கு). Retrieved 2026-03-20.
  5. ↑ "V.m.abraham(TDP):Constituency- ALAMPUR(MAHBUBNAGAR) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2026-03-20.
  6. ↑ "BRS MLA Abraham joins Congress" (in en). The Hindu இம் மூலத்தில் இருந்து 2025-08-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250805035545/https://www.thehindu.com/news/national/telangana/brs-mla-abraham-joins-congress/article67569728.ece.
  7. ↑ Rayasam, Raj (2023-11-24). "Angry over denial of BRS ticket, Alampur MLA Abraham joins the Congress; may queer pitch for party". The South First | News, Politics, Sports, Entertainment & Live Updates (in Indian English). Retrieved 2026-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எம்._ஆபிரகாம்&oldid=4613980" இலிருந்து மீள்விக்கப்பட்டது