வி. என். பி. வெங்கட்ராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி.என்.பி. வெங்கட்ராமன் (V. N. P. Venkatraman) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 இல் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற  பண்ருட்டி இராமச்சந்திரன்  2013ல் அக்கட்சியை விட்டு விலகினார். தன்னுடைய சட்ட மன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். எனவே இத்தொகுதியில் 2014ல்  இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் பண்ருட்டி இராமச்சந்திரனை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாக வி.என்.பி. வெங்கட்ராமன் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்[1][2]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் இத்தொகுதியைத் தா. மோ. அன்பரசன் கைப்பற்றினார்[3]

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "Alandur assembly byelection: V N P Venkatraman is AIADMK candidate". The Times of India. 6 March 2014. http://timesofindia.indiatimes.com/city/chennai/Alandur-assembly-byelection-V-N-P-Venkatraman-is-AIADMK-candidate/articleshow/31527829.cms. பார்த்த நாள்: 2017-04-27. 
  3. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  4. "TN civic polls: Filing of nominations begins, AIADMK list out". Business Standard. PTI. 26 September 2016. http://www.business-standard.com/article/pti-stories/tn-civic-polls-filing-of-nominations-begins-aiadmk-list-out-116092600943_1.html. பார்த்த நாள்: 2017-05-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._என்._பி._வெங்கட்ராமன்&oldid=3571393" இலிருந்து மீள்விக்கப்பட்டது