வி. இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. இராமசாமி
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
பதவியில்
6 அக்டோபர் 1989 – 14 பிப்ரவரி 1994
தலைமை நீதிபதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம்
பதவியில்
12 நவம்பர் 1987 – 6 அக்டோபர் 1989
பரிந்துரைப்புடெபி சிங் தெவாடியா
நியமிப்புசாந்தி சரூப் திவான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 பெப்ரவரி 1929 (1929-02-15) (அகவை 95)
துணைவர்சரோஜினி ராமசாமி

வீராசுவாமி ராமஸ்வாமி (V. Ramaswami; 15, பிப்பிரவரி 1929) என்பவர் இந்திய உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்தவர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.சிறீவில்லிப்புத்துர் இந்து பள்ளியிலும், மதுரையில் அமெரிக்கன் கல்லூரியிலும், சென்னையில் சட்டக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். [1]

இவர் மீது குற்றங்கள் சாற்றப்பட்டு இவரை உச்சநீதி மன்ற நீதிபதி பதவியிலிருந்து அகற்றுவதற்கு உரிய விசாரணையும் நடவடிக்கைகளும் நடந்தன. நீதிபதி இராமசாமி 1989 அக்டொபர் 1989 முதல் 1994 பிப்பிரவரி 14 வரை உச்சநீதி மன்ற நிதிபதியாகப் பதவி வகித்தார்.

ராமஸ்வாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் மற்றும் கிரிமினல் சட்டம் இரண்டையும் பயிற்சி செய்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 31 ஜனவரி 1971 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், அவர் 12 நவம்பர் 1987 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில், அவர் அக்டோபர் 6, 1989 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்; அதிலிருந்து அவர் பிப்ரவரி 14, 1994 அன்று ஓய்வு பெற்றார்.[2]

மேற்கோள்[தொகு]

  1. Profile of V. Ramaswami in Supreme Court of India website
  2. "Hon'ble Mr. Justice V. Ramaswami | LegalData.in".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._இராமசாமி&oldid=3864993" இலிருந்து மீள்விக்கப்பட்டது