வி. ஆர். சுதீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி.ஆர்.சுதீசு (V. R. Sudheesh) இவர் ஓர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழிச் சிறுகதை எழுத்தாளர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

கேரளாவின் கோழிக்கோடு, அருகே வடகரையில் சுதீசு பிறந்தார். மடப்பள்ளி அரசு கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்ற இவர், தெல்லிச்சேரி அரசு பிரென்னன் கல்லூரியில் மலையாள இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் முடித்துள்ளார். பின்னர் எஸ். என் அறக்கட்டளையின் கீழ் கல்லூரிகளில் ஆசிரியரானார். இப்போது செல்லனூர் எஸ்.என் கல்லூரியில் பணிபுரிகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை[தொகு]

சுதீசு மிகச் சிறிய வயதிலேயே எழுதத் தொடங்கினார். இவரது ஆரம்பகால படைப்புகள் மாத்ருபூமி வார இதழின் குழந்தைகள் பத்தியிலும் பின்னர் சந்திரிகா வார இதழ் மற்றும் தேசாபிமானி வார இதழிலும் வெளியிடப்பட்டது. இலயம் என்ற உள்நாட்டு இதழையும் வெளியிட்டுள்ளார். இவர் மடப்பள்ளி கல்லூரியின் மாணவராக இருந்தபோது, கோழிக்கோடு பல்கலைக்கழக கலை விழாவில் சிறுகதை போட்டியில் பரிசு வென்றார். மலையாள சிறுகதைகள் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தபோது சுதீசின் ஆரம்பகால கதைகள் வெளியிடப்பட்டன. இந்த மாற்றத்தின் ஆதரவாளர்களில் ஒருவரான இவர் இப்போது பின்நவீனத்துவ மலையாள இலக்கியத்தில் ஒரு முக்கியமான எழுத்தாளராகக் கருதப்படுகிறார். இவர் கேரள சாகித்ய அகாதமி விருது (இரண்டு முறை), தோப்பில் ரவி புரஸ்காரம், அயமனம் - சி. வி. சிறீராமன் புரஸ்காரம் பெற்றவர். இவரது கதைகள் கேரளாவில் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

விருதுகள்[தொகு]

  • 2017: குழந்தைகள் இலக்கியத்திற்கான கேரள சாகித்ய அகாதமி விருது - குருக்கன் மாசின்டே பள்ளி [1]
  • 2014: கதைக்கான கேரள சாகித்ய அகாதமி விருது - பவானா பெடனம்

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ஆர்._சுதீசு&oldid=3315109" இருந்து மீள்விக்கப்பட்டது