வி.வி. கிரி தேசிய தொழிலாளர் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. வி. கிரி தேசிய தொழிலாலர் நிறுவனம்
உருவாக்கம்1974
வகைகுடிமைப் பணி பயிற்சி நிறுவனம்
நோக்கம்தொழிலாளர் ஆராய்ச்சி
தலைமையகம்
சேவை பகுதி
இந்தியா
பொது இயக்குநர்
எச். சீனிவாசு, இந்திய இரயில்வே துறை
தாய் அமைப்பு
இந்திய அரசு
வலைத்தளம்http://www.vvgnli.gov.in/

வி.வி. கிரி தேசிய தொழிலாளர் நிறுவனம் (V.V.Giri National Labour Institute) இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு பயிற்சி நிறுவனமாகும். அரசு ஊழியர்களுக்கு தொழிலாளர் துறையில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அளிப்பதற்காக ஒரு தன்னாட்சி குடிமைப் பயிற்சி நிறுவனமாக இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நிர்வாகிகள், தொழிற்சங்கங்கள், பொதுத்துறை மேலாளர்கள் மற்றும் பிற அரசாங்கங்களை உள்ளடக்கிய தொழிலாளர்களுடன் தொடர்புடைய அலுவலர்கள் இங்கு பயிற்சி பெறுகிறார்கள். [1]

தொழிலாளர்கள் தொடர்பான ஆராய்ச்சி என்பது நிறுவனத்தின் முதன்மை நடவடிக்கைகளில் ஒன்றாகும். குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் விரிவுரைகளையும் அவ்வப்போது இந்நிறுவனம் மேற்கொள்கிறது.

முன்னதாக 1995 ஆம் ஆண்டு வரை தேசிய தொழிலாளர் நிறுவனம் என்று அழைக்கப்பட்ட இந்நிறுவனம் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரியின் நினைவாக தற்போதைய பெயருக்கு மாற்றி மறுபெயரிடப்பட்டது. வி.வி. கிரி தனது ஆரம்ப நாட்களில் நன்கு அறியப்பட்ட தொழிற்சங்க தலைவராக இருந்தார்.

ஆளுகை[தொகு]

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பொதுக்குழுவின் தலைவராக பணியாற்றுகிறார்.

மத்திய அரசு பிரதிநிதிகள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழுவின் மற்ற உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களைத் தவிர கூடுதலாக, தொழிலாளர் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த நபர்களும் பொதுக்குழுவின் ஒரு பகுதியாக சேர்க்கப்படுகின்றனர்.

நிர்வாக சபை பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது மற்றும் ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் நிர்வாகக் குழுவின் தலைவராக செயல்படுகிறார். [2]

ஒரு பொது இயக்குநர் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக பணியாற்றுகிறார். [3]

வி.வி.கிரி தேசிய தொழிலாளர் நிறுவனம் புது தில்லியின் சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு முதல் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களையும் வழங்கி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 'India Year Book 2008' Ministry of Information and Broadcasting Page 626
  2. 'India Year Book 2008' Ministry of Information and Broadcasting Page 626
  3. "V.V. Giri National Labour Institute - Governance" இம் மூலத்தில் இருந்து 2017-07-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170725025900/http://www.vvgnli.org/institute/governance. 

புற இணைப்புகள்[தொகு]