விஸ்வநாத் பட்
விஸ்வநாத் பட் | |
|---|---|
| பிறப்பு | 20 மார்ச்சு 1898 உமராலா, பாவ்நகர் அரசு, பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | 27 நவம்பர் 1968 (அகவை 70) |
| தொழில் | இலக்கிய விமர்சகர், அகராதியாளர் |
விஸ்வநாத் மகன்லால் பட் (Vishwanath Maganlal Bhatt) (20 மார்ச்சு 1898 – 27 நவம்பர் 1968) என்பவர் ஒரு குஜராத்தி இலக்கிய விமர்சகர் மற்றும் அகராதியாளர் ஆவார். இவர் குஜராத், இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் 22 நூல்களை வெளியிட்டுள்ளார். 1935 ஆம் ஆண்டு ரஞ்சித்ராம் சுவர்ண சந்திரக் விருது பெற்றார்.
வாழ்க்கை
[தொகு]விஸ்வநாத் பட் 20 மார்ச்சு 1898 அன்று பிரித்தானிய இந்தியாவின் பாவ்நகர் மாநிலத்தில் உள்ள உமராலாவில் பிறந்தார். 1916 ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றார். 1920 ஆம் ஆண்டு சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாகக் கொண்டு பட்டம் பெற்றார்.[1][2] மேற்படிப்பு தொடர விரும்பிய அவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் தாக்கத்தால் படிப்பை விட்டு அந்த இயக்கத்தில் இணைந்தார்.[3] இவர் சாவித்திரி என்பவரைத் திருமணம் செய்தார்.[4]
கல்வி மற்றும் பணி
[தொகு]1920–1926 காலகட்டத்தில் உம்ரேத், பரூச் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் குஜராத் வித்யாபீடத்தில் குஜராத்தி எழுத்துப்பிழை அகராதியான ஜோடணி கோஷ் தயாரிக்கும் குழுவில் இணைந்தார். அடுத்த ஆண்டு கோண்டல் சென்று பகவத்கோமண்டல் பணியில் ஈடுபட்டார். 1930–1939 காலகட்டத்தில் மீண்டும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1944–45 ஆம் ஆண்டுகளில் எஸ்.எல்.யு. மகளிர் கல்லூரியிலும், 1947–48 ஆம் ஆண்டுகளில் எல்.டி. கலைக் கல்லூரியிலும் குஜராத்தி பேராசிரியராகப் பணியாற்றினார்.[1][2] இவர் 27 நவம்பர் 1968 அன்று காலமானார்.[2]
படைப்புகள்
[தொகு]விஸ்வநாத் பட் குஜராத்தி இலக்கியத்தில் விமர்சனத் துறையில் செய்த பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். இவர் காதல்வாத (Romantic) இலக்கியப் பள்ளியைச் சேர்ந்த விமர்சகராகக் கருதப்பட்டார். இவரது படைப்புகள் மேலைநாட்டு இலக்கியக் கோட்பாடு மற்றும் விமர்சன முறைகளுக்கு ஆதரவானவையாக இருந்தன.[5][6] ஒரு விமர்சகர் ஒரு எழுத்தாளரைவிட உயர்ந்தவர் என்று அவர் கருதினார்.[3] விமர்சனம் ஒரு படைப்பு என்ற கருத்து தொடர்பாக விஸ்வநாத் பட் மற்றும் ராம்நாராயண் பாதக் ஆகியோருக்கிடையே நடைபெற்ற இலக்கிய விவாதம் அக்காலத்தில் பெரும் கவனத்தைப் பெற்றது.[7] குஜராத்தி இலக்கியத்தின் மூன்று முக்கிய விமர்சகர்கள் "மூன்று V-கள்" என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் விஷ்ணுபிரசாத் திரிவேதி, விஜய்ராய் வைத்யா மற்றும் விஸ்வநாத் பட் ஆவர்.[7] இவர் மொத்தம் 22 நூல்களை எழுதியுள்ளார்.[4]
விமர்சன நூல்கள்
[தொகு]இவரது முக்கிய விமர்சன நூல்கள்:[2]
- சாகித்ய சமிக்ஷா (1937)
- விவேகன் முகூர் (1939)
- நிகாஷ் ரேகா (1945)
- பூஜா அனே பரீக்ஷா (1962)
- சிதாரா-ஷிக்ஷா (1967)
விமர்சனக் கலையின் தன்மையையும் அதன் மதிப்பையும் குஜராத்தி இலக்கியத்தில் விளக்கியவர் என இவர் அறியப்படுகிறார். விமர்சனம் என்பது வெறும் ஆய்வு அல்ல, படைப்பாற்றல் கொண்ட ஒரு கலை என்று அவர் கருதினார்.[1][2] இவரது சௌஸ்தவப்ரியா அனே கௌதுக்ப்ரியா, ஷில் அனே சாஹித்யா போன்ற கட்டுரைகள் விமர்சனக் கோட்பாடுகளை விளக்குகின்றன. தல்பத்ராம், ரமண்லால் தேசாய், ஜவேர்சந்த் மேகாணி ஆகியோரின் படைப்புகளைப் பற்றி அவர் கட்டுரைகள் எழுதியுள்ளார்.[2] சாகித்யனோ ஸ்வாத்யாய் - பூர்வார்த்தம் (1963) என்ற நூல் வில்லியம் ஹென்றி ஹட்சன் எழுதிய இலக்கியப் படிப்பு ஓர் அறிமுகம் நூலை அடிப்படையாகக் கொண்டு இலக்கியக் கோட்பாடுகளை விளக்குகிறது. இதன் இரண்டாம் பகுதி வெளியிடப்படவில்லை.[1][2]
- காத்யா நவ்நீத் (1926)
- நர்மத்னு மந்திர் - காத்யாவிபாக் (1928)
- பரிபாஷிக் சப்தகோஷ் (1930–32)
- நர்மத்னு மந்திர் - பத்யவிபாக் (1938)
- நிபந்தமாலா (1940)
வாழ்க்கை வரலாறு
[தொகு]- வீர் நர்மத் (1933)[2]
மொழிபெயர்ப்புகள்
[தொகு]லியோ டால்ஸ்டாய்யின் சிறுகதைகளை அனந்த்ராய் ராவல் உடன் இணைந்து மொழிபெயர்த்தார்.[8][2]
- ஏவும் கேம் சுஜ்யு? (1928)
- பிரேம்னோ தம்ப் (1930)
- கதவலி 1-2 (1932, 1935)
- நவோ அவதார் 1-2-3 (1932, 1933, 1934)
- லக்னசுக் (1936)
விருதுகள்
[தொகு]விஸ்வநாத் பட் 1935 ஆம் ஆண்டு ரஞ்சித்ராம் சுவர்ண சந்திரக் விருது பெற்றார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 "સવિશેષ પરિચય: વિશ્વનાથ ભટ્ટ, ગુજરાતી સાહિત્ય પરિષદ - Vishwanath Bhatt, Gujarati Sahitya Parishad". gujaratisahityaparishad.com (in குஜராத்தி). Retrieved 20 April 2020.
- 1 2 3 4 5 6 7 8 9 10 11 Brahmabhatt, Prasad (2007). અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ (ગાંધીયુગ અને અનુગાંધી યુગ) Arvachin Gujarati Sahityano Itihas (Gandhiyug Ane Anugandhi Yug) [History of Modern Gujarati Literature (Gandhi Era & Post-Gandhi Era)] (in குஜராத்தி). Ahmedabad: Parshwa Publication. pp. 181–183.வார்ப்புரு:ISBN missing
- 1 2 "સિદ્ધાંતનિષ્ઠ વિવેચક: વિશ્વનાથ ભટ્ટ (1898-1968)". divyabhaskar. 2018-03-20. Retrieved 2020-04-21.
- 1 2 Akademi, Sahitya. Who's Who Of Indian Writers (in ஆங்கிலம்). Dalcassian Publishing Company.
- ↑ Jhaveri, Mansukhlal Maganlal (1978). History of Gujarati Literature. New Delhi: Sahitya Akademi. p. 179. கணினி நூலகம் 639128528.
- ↑ Gosai, Manisha (2020-04-21). "Ramnarayan V. Pathak's Literary Criticism in Translation". www.researchgate.net. Retrieved 2020-04-21.
- 1 2 Broker, Gulabdas (1971). "Chapter 4: Gujarati". Maharashtra Gazetteers: Language and Literature (PDF). Maharashtra State Gazetteers. Mumbai: Directorate of Government Printing, Stationery and Publications, Maharashtra State. p. 380.
- ↑ "સવિશેષ પરિચય: અનંતરાય રાવળ, ગુજરાતી સાહિત્ય પરિષદ". Anantrai Raval, Gujarati Sahitya Parishad (in குஜராத்தி). Retrieved 26 April 2020.