விஷ்ரந்தவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஷ்ரந்தவாடி என்பது இந்திய மாநிலமாகிய மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள பகுதி. விஷ்ரந்த் என்ற மராத்திய சொல்லுக்கு ஓய்வு என்று பொருள். வாடி என்ற சொல்லுக்கு சிற்றூர் என்று பொருள். அருகில் உள்ள புனிதத் தலங்களுக்கு செல்வோர், இங்கு தங்கி ஓய்வெடுப்பதால் இந்த ஊருக்கு இப்பெயர் வந்ததாகக் கூறுவர். இங்கிருந்து புனேவின் மற்ற பகுதிகளுக்கு பேருந்தின் மூலம் செல்லலாம்.

மக்கள்[தொகு]

முன்னர், மராத்திய மக்களே அதிகளவில் வசித்தனர். தற்காலத்தில், தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி பேசுவோரும் குடியேறியுள்ளனர். (ஐ.டி) தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரிவோருக்கு ஏற்ற இடமாக உள்ளது. இங்கு இந்திய அரசின் வான்படை அமைப்புகள் சில உள்ளன. புனே நகர காவலர்களுக்கான குடியிருப்புகளும் இங்குள்ளன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ரந்தவாடி&oldid=3614272" இலிருந்து மீள்விக்கப்பட்டது