உள்ளடக்கத்துக்குச் செல்

விஷ்ணு பிரபாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஷ்ணு பிரபாகர் (Vishnu Prabhakar) ( ஜூன் 21, 1912 - ஏப்ரல் 11, 2009) ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். அவர் பல சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் மற்றும் பயணக் குறிப்புகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். பிரபாகரின் படைப்புகளில் தேசபக்தி, தேசியவாதம் மற்றும் சமூக முன்னேற்றத்தின் செய்திகள் உள்ளன.

அவருக்கு 1993 ல் சாகித்ய அகாதமி விருதும், 1995 ல் மகாபண்டிட் ராகுல் சங்கிருத்யாயன் விருதும், 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்ம பூஷண் (இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் கௌரவம்) விருதும் வழங்கப்பட்டது. [1]

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

விஷ்ணு பிரபாகர் 1912 இல், ஜூன் 21 அன்று உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தின் மீரன்பூர் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை துர்கா பிரசாத் ஒரு தீவீரமான மதப்பற்று உடைய நபராக இருந்தார். அதனால், அவர் நவீன காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளாதவராக இருந்தார். பாரம்பரிய இந்து குடும்பங்களின் 'பர்தா பிரதாவை' நிராகரிக்கத் துணிந்த குடும்பத்தின் முதல் நன்கு படித்த பெண்மணியாக அவரது தாயார் மகாதேவி இருந்தார். பிரபாகர் தனது ஆரம்பக் கல்வியை முடித்து பன்னிரண்டு வயது வரை மீராபூரில் தங்கியிருந்தார். அவரது தாயார் அவரை ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள ஹிசாரில் உள்ள தனது தாய்மாமன் வீட்டுக்கு அனுப்பினார். அங்கு அவர் 1929இல், தனது பதினாறாவது வயதில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார்.  

அவர் உயர் கல்வியைத் தொடர விரும்பினார், ஆனால் மீராபூரில் உள்ள அவரது குடும்பத்தின் நிதி நிலைமை காரணமாக, அவர் ஒரு வேலையைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. தனது மாமாவின் முயற்சியின் மூலம் அவர் அரசாங்க வேலையில் சேர்ந்தார். அது நான்காம் வகுப்பு வேலையாக இருந்தது. மேலும், அவரது ஊதியமாக மாதத்திற்கு பதினெட்டு ரூபாய் மட்டும் கிடைத்தது. அவர் தனது பணியுடன் இணைந்து கல்வியையும் கற்றார். அவர், இந்திமொழியில் பிரபாகர் மற்றும் இந்தி பூசனா பட்டம் பெற்றார். சமஸ்கிருதம் மொழியில் பிரக்யா பட்டமும், ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும் பெற்றார்.  

அவர் தனது படைப்புகளுடன் இலக்கியத்தில் ஆர்வத்தைத் தொடர்ந்தார். ஹிசாரில் உள்ள ஒரு நாடக நிறுவனத்திலும் சேர்ந்தார். இவரது இலக்கிய வாழ்க்கை 1931 ஆம் ஆண்டில் இந்தி மிலாப்பில் அவரது முதல் கதை தீபாவளி வெளியீட்டில் தொடங்கியது. [2] அவர் 1939 இல் தனது முதல் நாடகமான ஹத்யா கே பாட் எழுதினார். இறுதியில் அவர் ஒரு முழுநேர எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் தனது தாய் மாமாவின் குடும்பத்துடன் இருபத்தேழு வயது வரை தங்கியிருந்தார். அவர் சுசிலா பிரபாகரை 1938 இல் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி, 1980 இல் இறக்கும் வரை அவரது இலக்கியத்திற்கு ஒரு உத்வேக ஆதாரமாக இருந்தார். [3]

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நாடக இயக்குநராக, 1955 செப்டம்பர் முதல் 1957 மார்ச் வரை, புது தில்லியின் அகில இந்திய வானொலியின் ஆகாஷ்வானியில் பணியாற்றினார். 2005 ஆம் ஆண்டில் ராஷ்டிரபதி பவனில் முறைகேட்டை எதிர்கொள்ள நேரிட்டதாகக் கூறி தனது பத்ம பூஷண் விருதைத் திருப்பித் தருவதாக அச்சுறுத்தியபோது அவர் செய்தி வெளியிட்டார்.

விஷ்ணு பிரபாகர் தனது 96 வயதில், ஏப்ரல் 11, 2009 அன்று புதுதில்லியில் நோய்வாய்ப்பட்டு இறந்தார். [4] [5] அவர் இதய பிரச்சினை மற்றும் சிறுநீர் பாதை நோயால் பாதிக்கப்பட்டார். அவரது மனைவி சுசீலா பிரபாகர் 1980 இல் இறந்தார். [3] பிரபாகருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது மகன்களான அதுல் பிரபாகர் மற்றும் அமித் பிரபாகர் ஆகியோர் தங்கள் தந்தையின் கடைசி விருப்பப்படி அவரது உடலை புதுதில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்தனர்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்[தொகு]

 1. சாகித்ய அகாடமி விருது, 1993
 2. மகாபண்டிட் ராகுல் சங்கிருத்யாயன் விருது, 1995 [6]
 3. பத்ம பூஷண், 2004 [7]
 4. சோவியத் லேண்ட் நேரு விருது, 1976 அவாரா மாசிஹாவுக்கு

அவரது அர்த்தநாரிசுவரா (தி ஆண்ட்ரோஜினஸ் கடவுள் அல்லது சிவன்) புதினத்திற்காக, சாகித்ய அகாதமி மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

குறிப்புகள்[தொகு]

 1. Official listing of Sahitya Akademi Awards in Hindi-language பரணிடப்பட்டது 5 செப்டெம்பர் 2009 at the வந்தவழி இயந்திரம் Sahitya Akademi
 2. Vishnu Prabhakar (Abhivyakti)
 3. 3.0 3.1 Aalekh Samvad, June 2003
 4. "Vishnu Prabhakar passes away (The Hindu)". Archived from the original on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2019-12-19. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 5. "Renowned literateur Vishnu Prabhakar dies (Times of India)". Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-12-19. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 6. Mahapandit Rahul Sankrityayan Awardees in Hindi
 7. List of Padma Bhushan Recipients

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணு_பிரபாகர்&oldid=3572033" இலிருந்து மீள்விக்கப்பட்டது