விஷ்ணு சஹாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஷ்ணு சஹாய் (Vishnu Sahay) (22 நவம்பர் 1901 - 3 ஏப்ரல் 1989) [1] [2] முன்னாள் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும், இந்திய இந்திய அமைச்சரவைச் செயலாளரும் ஆவார். இவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அசாம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும் , கேரளா மற்றும் இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் ஆளுநருமான பகவன் சஹாயின் மூத்த சகோதரர் ஆவார். இவர், உத்தரப் பிரதேச மாநிலத்தின் சந்தௌசி, எஸ்.எம் கல்லூரியிலும், பின்னர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பயின்றார். [3] இவர் இந்தியக் குடிமைப் பணியின் 1925 தொகுதிகளில் உறுப்பினராக இருந்தார். அதே ஆண்டு அக்டோபர் 16 அன்று தேர்வில் தேர்ச்சி பெற்றார். [4]

அரசுப் பணியாளர்[தொகு]

இவர், இந்தியக் குடிமைப் பணியில் நீண்ட மற்றும் புகழ்பெற்ற வாழ்க்கையை கொண்டிருந்தார். இவர் , உத்தரப் பிரதேசத்தின் சர்க்கரை ஆணையாளராகவும், சர்க்கரை கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றினார். [5] மேலும், இந்திய அரசின் வேளாண் செயலாளராக இருந்தபோது , அமுல் நிறுவனத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு வர்கீஸ் குரியனுக்கு நியூசிலாந்து சென்று பால்பண்ணை சார்ந்து படிப்பதற்கான உதவித்தொகை பெற உதவினார். இவர் வெளிவிவகார அமைச்சகத்தில் காஷ்மீர் விவகாரங்களுக்கான செயலாளராகவும் பணியாற்றினார். 1958- 1960 மற்றும் 1961- 1962 காலங்களில் இரண்டு முறை இந்திய அமைச்சரவைச் செயலாளராவும் இருந்தார். [6]

ஆளுநர் பதவிக்காலம்[தொகு]

இவர், இரண்டு முறை அசாமின் ஆளுநராக இருந்தார். 1960 நவம்பர் 12 முதல் 1961 சனவரி 13 வரையிலும், 1962 செப்டம்பர் 7 முதல் 1968 ஏப்ரல் 17 வரையிலும் பணியாற்றினார். [7] [8] அசாமின் ஆளுநராக, இவர் 1964இல் நாகா கிளர்ச்சியாளர்களுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். [9] மேலும், நாகாலாந்தின் முதல் ஆளுநராகவும் இருந்தார். 1963 திசம்பர் 1 முதல் 1968 ஏப்ரல் 17 வரை அந்த பதவியை வகித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mukherjee, Amiya Ranjan (1961). Current Affairs. A. Mukherjee & Company. பக். 315. https://books.google.com/books?id=pigYAQAAIAAJ&q=Vishnu+Sahay. 
  2. Asia & Pacific Oceania, 2003, S. 733
  3. "SM College - Alumni". SM College. மூல முகவரியிலிருந்து 27 செப்டம்பர் 2013 அன்று பரணிடப்பட்டது.
  4. The London Gazette, 6 November 1925
  5. "Problems Of Sugar Industry In India".
  6. "Cabinet Secretaries Since 1950". Cabinet Secretariat. மூல முகவரியிலிருந்து 10 March 2010 அன்று பரணிடப்பட்டது.
  7. "States of India since 1947".
  8. "Governors of Assam since 1937 onwards".
  9. "Dawn of Peace in Nagaland". மூல முகவரியிலிருந்து 14 March 2012 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணு_சஹாய்&oldid=3229004" இருந்து மீள்விக்கப்பட்டது