விஷ்ணுவோ சாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷ்ணுவோ சாய்
சுரங்கங்கள் மற்றும் எஃகு துறை அமைச்சா்l
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 பெப்ரவரி 1964 (1964-02-21) (அகவை 60)
பகியா, கங்குரி, மத்தியப் பிரதேசம்
(இப்போது சத்தீஸ்கர்)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கௌசல்யா தேவி
பிள்ளைகள்மகன் தோஷேந்திரரே சாய் மகள்கள் என்.சாய் & ஸ்ருதி சாய்
வாழிடம்(s)பகியா, கங்குரி
As of 28 மே, 2014
மூலம்: [1]

விஷ்ணு தேவ் சாய் (பிறந்த 21 பிப்ரவரி 1964) இவா் 16-வது மக்களவை , இந்தியா பாராளுமன்றத்தில் உறுப்பினராக உள்ளாா். மேலும்  இந்திய அரசில் எஃகு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சராகவும் இருக்கிறாா். இவா் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.இவா் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) யை சாா்ந்தவா்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

21 பிப்ரவரி 1964, விஷ்ணு தேவ் சாய் விவசாய குடும்பத்தில் பிறந்தாா். இவருடைய குடும்பம் சட்டீஸ்கா் மாநிலம்,  ஜஷ்பூர் மாவட்டத்தின் பாகியா கிராமம் ஆகும். அவர் தனது உயர் நிலை பள்ளி கல்வியை ஜஷ்பூரிலுள்ள லயோலா மேல்நிலைப் பள்ளியில் பயின்றாா். 

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

 ஸ்ரீ ராம் நாராயண் சாய் மற்றும் திருமதி. ஜஸ்மனி தேவி ஆகியோருக்கு மீது 21 பிப்ரவரி 1964 இல் விஷ்ணு தேவ் சாய் பிறந்தார். இவர் 1991 இல்  திருமதி.கெளசல்யா தேவி திருமணம் செய்து  கொண்டாா்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

விஷ்ணு தேவ் சாய் அரசியல் வாழ்க்கை தொடங்கிய காலகட்டத்தில் அவர் பியாஜியா கிராமத்திலிருந்து சர்பான் தொகுதியிலிருந்து  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • 1990-98 :மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினா் (இரண்டு முறை)
  • 1999 : 13 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 
  • 1999-2000 : அவையில் அமா்வின் போது உறுப்பினர்களின் வருகை குழு  மற்றும் உணவு, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் பொது விநியோகம் சாா்ந்த குழு உறுப்பினா்.
  • 2000-2004 :வேளாண் அமைச்சகம்,  ஆலோசனைக் குழு உறுப்பினர்.
  • 2004 :14வது மக்களவைக்கு  மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தகவல் தொழில்நுட்பம் குழு உறுப்பினா்.
  • 5 ஆகஸ்ட் 2007 :நீர் வளங்கள் குழு உறுப்பினர்.
  • 2009 :15வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (3 வது முறை)
  • 31 ஆகஸ்ட் 2009 :வணிக குழு உறுப்பினா்.
  • 2014 :16வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (4 வது முறை)
  • 9 நவம்பர் 2014: சுரங்கங்கள், எஃகு துறை அமைச்சா்..
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுவோ_சாய்&oldid=3845655" இலிருந்து மீள்விக்கப்பட்டது