விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களாலும், அவரது நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பாகும். அவரது குறிப்பிடத்தக்க படைப்பான “விஷ்ணுபுரம்” புதினத்தின் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. இதன் தலைமை இடம் தற்போது கோவை. 2009 ஆகத்து மாதம் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. வி. அரங்கசாமி. இப்போது கோவையை மையமாக்கி செயல்படுகிறது. ஆண்டுதோறும் விஷ்ணுபுரம் இலக்கிய விருதினை வழங்கி வருகிறது.

நோக்கம்[தொகு]

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சீரிய இலக்கியத்தை பரப்பும் நோக்கம் கொண்டது. நல்ல எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் கவனப்படுத்துவதும் ஆராய்வதும்தான் இலக்குகள். அதன்பொருட்டு கருத்தரங்கங்களையும் ஆய்வரங்கங்களையும் நடத்துகிறது.

விஷ்ணுபுரம் 2010 முதல் இலக்கியவட்டம் வருடம்தோறும் இலக்கியவிருதுகளை வழங்கிவருகிறது

விருதுகள்[தொகு]

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இலக்கியம் பண்பாட்டிற்காக மூன்று விருதுகளை வழங்கி வருகிறது:

 • விஷ்ணுபுரம் விருது
  அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளுக்கான வாழ்நாள் சாதனை விருது
 • விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது[1]
  இளம் கவிஞர்களுக்கான விருது
 • தமிழ் விக்கி தூரன் விருது[2]
  இலக்கியம், தமிழாய்வு, பண்பாட்டாய்வு களங்களில் செயல்படும் ஐம்பது வயதுக்கு உட்பட்ட ஆளுமைகளுக்கான விருது

தமிழ் விக்கி[தொகு]

தமிழ் விக்கி என்பது மீடியாவிக்கி மென்பொருள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் செயல்படும் இணையக் கலைக்களஞ்சியம். எழுத்தாளர் ஜெயமோகன் முன்னெடுப்பில் செயல்வடிவம் பெற்ற இத்தளம், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. தமிழ் விக்கி மே, 7 2022 - இல் தொடங்கிவைக்கப்பட்டது.[3] முதன்மையாக தமிழிலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த கட்டுரைகளைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் விக்கிபீடியாவின் மொழிக் கொள்கையை எதிர்த்தும், அதன் குறிப்பிட்டதக்கமை நெறி காரணமாக பல எழுத்தாளர்களுக்கு கட்டுரைகள் இடம்பெறாத இடைவெளியை நிரப்பவும் தமிழ் விக்கி செயல்படுகிறது.[4] தரத்தினை நிலைநிறுத்துவதற்காக தமிழ் விக்கிக்கு ஆசிரியர் குழு ஒன்றும் உண்டு. அ. கா. பெருமாள் இதன் முதன்மை ஆசிரியர். பேராசிரியர் மௌனகுரு, பேராசிரியர் சிவக்குமாரன், பேராசிரியர் மா. சுப்ரமணியம், பேராசிரியர் தெ.வே. ஜெகதீசன், முனைவர் ப. சரவணன் ஆகியோர் கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்கள். நாஞ்சில் நாடன், சோ. தர்மன், சுனில் கிருஷ்ணன், சுசித்ரா, ஜெயமோகன் ஆகியோர் படைப்புத்துறை சார்ந்த ஆசிரியர்கள்.[5] தமிழ் விக்கியின் முதல் கட்டுரை நவீனத் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியரான பெரியசாமித் தூரனின் பக்கம்.[6]

இந்த இணையக் கலைக்களஞ்சியத்தின் தனித்த கூறுகளாக பின்வருவன சொல்லப்பட்டுள்ளன:

 • நாடறிந்த மூத்த படைப்பாளிகளும், கல்விப்புல ஆய்வாளர்களும் அடங்கிய ஆசிரியர் குழுவின் ஒப்புதலுக்குப் பின்பே பதிவுகளும், திருத்தங்களும் வெளியாகும். இதனால் நம்பகத்தன்மையும், போதிய தகவல்கள் அடங்கியிருப்பதும் உறுதிசெய்யப்படும்.
 • மொழிநடையானது நேர்த்தியாகவும், சரளமான வாசிப்புக்கு உகந்ததாகவும் இருக்கும்.

இதற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் சார்ந்தும், இத்தகைய கலைக்களஞ்சியத்தின் தேவையை வலியுறுத்தும் விதமாகச் சொல்லப்பட்ட கருத்துகளில் காணப்படும் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விமர்சனங்கள் சார்ந்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. [7][8]

நிகழ்ச்சிகள்[தொகு]

விஷ்ணுபுரம் விருது விழா[தொகு]

விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது விழா[தொகு]

 • 2017 - சபரிநாதனுக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா
 • 2018 - கண்டராதித்தனுக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா
 • 2019 - ச. துரைக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா
 • 2020 - வேணு வெட்ராயனுக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா
 • 2021 - மதாருக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா

பிற விழாக்கள்[தொகு]

 • நாஞ்சில் நாடன் விழா (2010) - சென்னை
 • கலாப்ரியா படைப்புக் களம் (2010) - கோவை
 • யுவன் சந்திரசேகர் கவிதையரங்கு (2011) - கன்னியாகுமரி
 • தேவதேவன் கவிதை அரங்கு (2011) - நாகர்கோயில்
 • கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு (2013) - ஆலப்புழா
 • ராய் மாக்ஸம் விழா (2015) - சென்னை
 • எம்.ஏ.சுசீலா பாராட்டு விழா (2018) - சென்னை
 • அரசன் பாரதம் நிறைவு விழா (2020) - கோவை
 • புவியரசு 90 (2021) - கோவை

ஆய்வரங்குகள்[தொகு]

 • கலாப்பிரியா படைப்புக்களம் (2010) - கோவை (படைப்புகள் மீதான விமர்சன அரங்கம்)
 • உதகை கவிதையரங்கு (2010) - நாராயணகுருகுலம் - உதகை
 • தேவதேவன் கவிதையரங்கு (2011) - திற்பரப்பு
 • உதகை காவிய அரங்கு (2011) - நாராயணகுருகுலம் - உதகை
 • யுவன் கவிதையரங்கு (2011) - கன்னியாகுமரி
 • விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பரங்கு [2012 ]காரைக்குடி
 • இலக்கியவிவாத அரங்கு ஊட்டி 2012
 • கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு[ 2012] ஆலப்புழா
 • இலக்கிய விவாத அரங்கு ஏற்காடு [2013]
 • வெண்முரசு விவாத அரங்கு மூணாறு 2014
 • இலக்கிய விவாத அரங்கு ஊட்டி [2014]

வாசகர் சந்திப்புகள்[தொகு]

 • ஊட்டி இலக்கியச் சந்திப்பு மே 2015
 • இளையவாசகர் சந்திப்பு ஈரோடு பெப்ருவரி 2016
 • இளையவாசகர் சந்திப்பு கொல்லிமலை மார்ச் 2016
 • இளையவாசகர் சந்திப்பு கோவை மார்ச் 2016
 • இளையவாசகர் சந்திப்பு ஊட்டி ஏப்ரல் 2016
 • சிங்கப்பூர் இலக்கியச் சந்திப்பு செப்டெம்பர் 2016

இணைய உரையாடல்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. [1]
 2. [2]
 3. [3]
 4. [4]
 5. "தமிழ் விக்கி: இது வாசகர்களின் பங்களிப்புடன், தொடர்ந்து விரியக்கூடிய ஒன்று!". விகடன். 2022-05-12 அன்று பார்க்கப்பட்டது.
 6. [5]
 7. "அரசு செய்யாததால் நாங்கள் செய்கிறோம்: ஜெயமோகன் பேட்டி". அருஞ்சொல். 2022-05-09 அன்று பார்க்கப்பட்டது.
 8. "ஜெயமோகனின் `தமிழ் விக்கி' சர்ச்சை: ஆதரவும் எதிர்ப்பும்! நடப்பது என்ன?". விகடன். 2022-05-12 அன்று பார்க்கப்பட்டது.
 9. "A. Madhavan selected for Vishnupuram Literary Award". The Hindu. http://www.thehindu.com/arts/books/article950673.ece. பார்த்த நாள்: 29 December 2012. 
 10. "மனதை அமைதிப்படுத்தும் தேவதேவனின் கவிதைகள்". 28 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
 11. "In the stillness of poetry". The Hindu. http://www.thehindu.com/life-and-style/metroplus/in-the-stillness-of-poetry/article4235002.ece. பார்த்த நாள்: 29 December 2012. 
 12. Vishnupuram Award for Srilankan Tamil Writer
 13. "Writer C. Muthusamy honoured with Vishnu puram Award -2017".
 14. "Vishnupuram award presented".
 15. "Vishnupuram award to be conferred to Tamil Teacher and poet B M Habibulla".
 16. "எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்க்கு விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு".
 17. "Wanderer poet Vikramadityan wins Vishnupuram Award".
 18. "டிச.26-ல் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது: கோவை விழாவில் கவுரவம்". Hindu Tamil Thisai.
 19. "Cong leader Jairam Ramesh to felicitate Vishnupuram awardee on December 26 | Entertainment". MyNews 24x7. 20 December 2021.