உள்ளடக்கத்துக்குச் செல்

விவேக் மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேக் மிசுரா
தனித் தகவல்கள்
முழுப் பெயர் விவேக் மிசுரா
நாடு இந்தியா
நகரம் அலகாபாத்

விவேக் மிசுரா (Vivek Mishra) இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த ஓர் இந்திய சீருடற்பயிற்சி விளையாட்டு வீரராவார். 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 அன்று இவர் பிறந்தார்.

2006 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்[1] மற்றும் 2006 ஆசிய விளையாட்டு போன்ற அனைத்துலகப் போட்டிகளில் இவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். [2]

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய சீருடற்பயிற்சி அணிக்கு அலகாபாத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஐந்து சீருடற்பயிற்சி விளையாட்டு வீர்ர்களில் இவரும் ஒருவராக இருந்தார். [3] ஆனால் தாடை எலும்பு முறிவு காரணமாக இவரால் போட்டியிட முடியவில்லை. [4]

இணை கம்பித்தடுப்புகளின் மேல் விவேக் மிசுரா பயிற்சி

மிசுராவின் தேசிய மற்றும் அனைத்துலக தடகள சாதனைகளுக்காக இவருக்கு 2008-2009 ஆண்டு காலத்திற்கான லட்சுமன் விருது வழங்கப்பட்டது. [4] வெண்கலச் சிலை, காகிதச் சுருள், 50000 ரூபாய் பொன்முடிப்பு முதலானவை இவ்விருதுக்கான பரிசுப் பொருட்களாகும். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "M2006 > Athletes > Display". Melbourne2006.com.au. 2006-03-26. Archived from the original on 2014-10-28. பார்க்கப்பட்ட நாள் 2013-10-23.
  2. "15th Asian Games Doha Qatar 2006 Artistic Gymnastics". Gymnasticsresults.com. Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-20.
  3. "Five Allahabad gymnasts in CWG squad". Times of India. 9 June 2010. 
  4. 4.0 4.1 4.2 Laxman, Rani Laxmi Bai awards given away, இந்தியன் எக்சுபிரசு, 10 September 2011. Retrieved 22 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_மிசுரா&oldid=3571845" இலிருந்து மீள்விக்கப்பட்டது