விவேக் சிப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விவேக் சிப்பர்(Vivek Chibber) என்பவர் நியூயார்க்கு பல்கலைக் கழகத்தின் சமூகவியல் பேராசிரியராக உள்ளார். மார்க்சியக் கருத்தாளர், பதிப்பாசிரியர், நூலாசிரியர், கல்வியாளர் எனக் கருதப்படுகிறார்.[1] பின்னைக்குடியேற்ற மூலதனக் கருத்தியல் பற்றிய ஒரு நூல் எழுதியுள்ளார்.

இந்தியாவில் பிறந்த விவேக் சிப்பர் அமெரிக்காவிற்குச் சென்று அரசியல் கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் 1999இல் விசுகான்சின் பல்கலைக் கழகத்தில் குமுகவியலில் ஆய்வுப் பட்டம் பெற்றார். சமூகவியல் சார்ந்த பல் இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

உசாத்துணை[தொகு]

http://sociology.fas.nyu.edu/object/vivekchibber.html பரணிடப்பட்டது 2014-07-01 at the வந்தவழி இயந்திரம்

  1. thehindu.com/opinion/op-ed/sociologist-vivek-chibber-saysdalit-movement-has-to-see-itself-as-part-of-a-classwide-movement/article8305404.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_சிப்பர்&oldid=3228991" இலிருந்து மீள்விக்கப்பட்டது