உள்ளடக்கத்துக்குச் செல்

விவேக் சிங் (சமையல் கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேக் சிங்
தி சின்னமன் கிளப்
பிறப்பு6 மே 1971 (1971-05-06) (அகவை 55)
ஆசான்சோல், மேற்கு வங்காளம், இந்தியா
கல்விஇந்திய ஓட்டல் மேனேச்மெண்ட், தில்லி
வாழ்க்கைத்
துணை
அர்சணா சிங்
பிள்ளைகள்2
சமையல்சார் பணி
சமையல் முறைஇந்திய உணவுமுறை
தற்போதைய உணவகம்
தொலைக்காட்சி நிகழ்ச்சி
    • சனிகிழமை சமையலறை
    • மதுர் ஜாஃப்ரியின் கறி நேஷன்
    • அட் ஹோம் வித் ரேச்சல் ஆலன்
    • மை கிச்சன் ரூல்ஸ் யூகே
வலைத்தளம்
viveksingh.co.uk

விவேக் சிங் (Vivek Singh) (பிறப்பு 6 மே 1971) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரித்தானிய சமையல் கலைஞரும் உணவக உரிமையாளரும் ஆவார். இவர் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நவீன இந்திய உணவகங்களின் குழுவான சின்னமன் குழு நிர்வாக சமையல் கலைஞரும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். சிங், சாட்டர்டே கிச்சன் உட்பட பிபிசியின் உணவு நிகழ்ச்சிகளில் ஒரு வழக்கமான விருந்தினர் ஆவார்.[1] இவர் 1971ஆம் ஆண்டு, மே மாதம், 6ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

விவேக் சிங், இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள அசன்சோல் என்ற நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றும் சமூகத்தில் பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை ஒரு சுரங்கப் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் அசன்சோலில் உள்ள செயின்ட் பேட்ரிக் பள்ளியில் கல்வி பயின்றார்.[2]

விவேக் சிங் 1990 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை புது தில்லியில் உள்ள இந்திய ஓட்டல் மேனேச்மெண்ட் பூசாவில் படித்தார். 1993 ஆம் ஆண்டில் இவர் ஓபராய் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பராமரிப்பு ஓட்டலில் சமையல் பயிற்சியையும் ஓபராய் விமான சேவைகளையும் பெற்றார்.[3]

தொழில் வாழ்க்கை

[தொகு]

விவேக் சிங் தனது சமையல் வேலையை மும்பையில் உள்ள ஓபராய் பிளைட் சேவை என்ற இடத்தில் தொடங்கினார். பின்னர் கொல்கத்தாவில் உள்ள ஓபராய் கிராண்டில் பணியாற்றினார். அரச இந்திய உணவு வகைகளில் நிபுணத்துவம் பெற்ற கரானா என்ற உணவகத்தின் செயல்பாடுகளை இவர் மேற்பார்வையிட்டார்.[4]

1998 ஆம் ஆண்டில், சிங் ஜெய்ப்பூரில் உள்ள ராஜ்விலாஸில் நிர்வாக சமையல்காரராக இருந்து வந்தார். இங்கு இவர் உணவக உரிமையாளர் இக்பால் வகாபை சந்தித்தார். இவரின் உதவியால் 2001 ஆம் ஆண்டில், விவேக் சிங் லண்டனில் தி சின்னமன் கிளப் தொடங்க காரணமாக அமைந்தது.[5]

உணவகங்கள்

[தொகு]

தி சின்னமன் உணவகம்

2001 ஆம் ஆண்டில், சிங் லண்டனின் மேற்கு மின்ஸ்டரில் தி சின்னமன் உணவகத்தை திறந்தார். இந்த உணவகம் நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி பாரம்பரிய இந்திய உணவுகளுக்குப் புகழ் பெற்றது. இது திறக்கப்பட்ட சிறிது காலத்திலேயே, தி கார்டியன் இதழ் இந்த உணவகத்தை "தீவிரமான சமையல் லட்சியத்துடன் கூடிய ஒரு அழகிய உணவு அனுபவம்" என்று அழைத்தது.[6] பிற்காலங்களில், தி டெலிகிராஃப் இதழ், இந்த உணவகத்தின் உயர்தர உணவு மற்றும் இந்திய பிராந்திய சுவைகளின் கலவையைப் பாராட்டி எழுதியது.[7]

சின்னமன் உணவகம் & அனிஸ் சின்னமன் உணவகம் & அனிஸ் 2008 ஆம் ஆண்டில் லண்டன் நகரில் திறக்கப்பட்டது. இந்த உணவகத்தை மதிப்பாய்வு செய்த விமர்சகர் ஃபே மசுலர் என்பவர் சிங்கை "கவர்ச்சிகரமான மற்றும் அற்புதமான உணவுகளை உருவாக்கும் ஒரு திறமையான சமையல்காரர்" என்று விவரித்தார்.[8]

சின்னமன் பசார் (கோவென்ட் கார்டன்) சின்னமன் பசார் 2016 ஆம் ஆண்டில் கோவென்ட் கார்டனில் திறக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் இதற்கு மிச்செலின் வழிகாட்டியால் பிப் கோர்மண்ட் என்ற விருது வழங்கப்பட்டது.[9]

சின்னமன் உணவக பேட்டர்சீ

2018-ஆம் ஆண்டில், சிங் லண்டனில் புனரமைக்கப்பட்ட பேட்டர்சீ பவர் நிலையத்தில் சின்னமன் கிச்சன் பேட்டர்சீயைத் திறந்தார். இந்த உணவகம் சமகால இந்திய உணவு வகைகளைப் பரிமாறுகிறது.

சின்னமன் உணவகம் லீட்ஸ் 2025-ல், சிங் சின்னமன் உணவகம் பிராண்டை லீட்ஸில் உள்ள தி குயின்ஸ் ஓட்டலில் விரிவுபடுத்தினார். இதன் மெனு இந்திய ரயில் பயணங்களிலிருந்து உத்வேகம் பெற்றது.[10]

சின்னமன் பசார் ரிச்மண்ட் சின்னமன் பசார் ரிச்மண்ட், பசாரின் இரண்டாவது கிளையாக 2024 ஆம் ஆண்டில் தென்மேற்கு லண்டனில் திறக்கப்பட்டது.

சின்னமன் உணவகம் ஆக்ஸ்போர்டு (மூடப்பட்டது) சின்னமன் கிச்சன் ஆக்ஸ்போர்டு 2017-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது லண்டனுக்கு வெளியே சிங்கின் முதல் உணவகமாகும். இது 2021 ஆம் ஆண்டில் மூடப்பட்டது.[11]

ஊடகத் தோற்றங்கள்

[தொகு]

சிங், பிபிசியின் 'சாட்டர்டே உணவகம்' மற்றும் சேனல் 4-இன் 'மை கிச்சன் ரூல்ஸ் யூகே' நிகழ்ச்சிகளில் அடிக்கடி தோன்றியுள்ளார்.[12][13]

பொதுத் தோற்றங்கள்

[தொகு]

சிங், 'கோர்மெட் அபுதாபி' மற்றும் 'மகாராஜாஸ் எக்சுபிரஸ்'சில் ஒரு கூட்டுப் பயணம் உள்ளிட்ட சர்வதேச சமையல் நிகழ்வுகளில் உரையாற்றியுள்ளார்.[14][15]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சிங் திருமணமானவர் மற்றும் தெற்கு லண்டனில் வசித்து வருகின்றார்.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vivek Singh". BBC Food. Retrieved 7 September 2025.
  2. "Chefspective: Vivek Singh, Executive Chef @ Cinnamon Club and Cinnamon Kitchen". Londonist. 2010-09-24. Retrieved 2025-08-17.
  3. Bach, Eric. "Vivek Singh". British Heritage. Retrieved 2025-06-01.
  4. "About Chef Vivek Singh". Redhotcurry News இம் மூலத்தில் இருந்து March 5, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305034826/http://www.redhotcurry.com/profiles/vivek_singh.htm.
  5. "A creative use of spice". The Daily Telegraph. https://www.telegraph.co.uk/foodanddrink/3308681/A-creative-use-of-spice.html.
  6. Rayner, Jay (17 March 2002). "Cinnamon Club review". The Guardian. https://www.theguardian.com/lifeandstyle/2002/mar/17/foodanddrink.features3.
  7. "Cinnamon Club, Westminster, review". The Telegraph. 27 March 2018. https://www.telegraph.co.uk/food-and-drink/restaurants/cinnamon-club-review-westminster-restaurant/.
  8. Maschler, Fay. "Evening Standard restaurant review of Cinnamon Kitchen". London Evening Standard. Retrieved 26 November 2008.
  9. "Cinnamon Bazaar". MICHELIN Guide. Retrieved 7 September 2025.
  10. "The Queens Hotel - Cinnamon Kitchen Opening". The Queens Hotel. Retrieved 2025-06-24.
  11. "Home - Cinnamon Kitchen". www.cinnamon-kitchen.com. Archived from the original on 27 February 2024. Retrieved 2024-12-28.
  12. "Vivek Singh". BBC Food. Retrieved 7 September 2025.
  13. "My Kitchen Rules UK – Guest Judges". Channel 4. Retrieved 7 September 2025.
  14. "Gourmet Abu Dhabi 2011". Rotana Times. http://www.rotanatimes.com/beachrotana/offers/237.
  15. Jenkins, Allan (16 April 2011). "A passage through India on Maharaja Express". The Observer. Retrieved 16 April 2011.
  16. "Vivek Singh". BBC Food. Retrieved 7 September 2025.