விவேகானந்தா உடற்பயிற்சிக்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விவேகானந்தா உடற்பயிற்சிக்கூடம் (Vivekananda Byamagar) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் தலைநகரமான அகர்த்தலாவிலுள்ள ஓர் உடற்பயிற்சிக்கூடமாகும். [1][2][3] விவேகானந்தா பையோமகர் என்று அழைக்கப்படும் இது அகர்த்தலா நகரத்தின் பழமையான உடற்பயிற்சி கூடமாக கருதப்படுகிறது. [1] புகழ்பெற்ற சீருடற்பயிற்சி விளையாட்டுப் பயிற்சியாளர் தலிப் சிங் இங்குதான் பணிபுரிந்தார். [1][3][4]

1950 ஆம் ஆண்டுகளில் இங்கு மல்யுத்தம், உடற்கட்டமைப்பு மற்றும் பாரம் தூக்குதல் போன்ற விளையாட்டுகளுக்கு மட்டுமே பயிற்சியளிக்கப்பட்டது. துலால் தெபார்மா மற்றும் பிரணாப் மசூம்தர் போன்ற சில நல்ல பாரம் தூக்கும் வீர்ர்களும் இங்கு உருவானார்கள்.

1964 ஆம் ஆண்டு அரியானாவைச் சேர்ந்த துலீப் சிங் சீருடற்பயிற்சி விளையாட்டின் பயிற்சியாளராக வந்தபோதுதான் சீருடற்பயிற்சி விளையாட்டு தற்செயலாக இங்கு தொடங்கியது.

மந்து தேப்நாத், பாரத் கிசோர், தெப்பார்மேன், என்.என். தேய், பலராம் சில், மதுசூதன் சாகா, உலோபமுத்ரா கோசு, ரத்தன் தேப்நாத்து, மணிகா தேப்நாத்து, கல்பனா தேப்னாத்து, பிசுவேசுவர் நந்தி, அபு சில், தீபா கர்மாகர் போன்ற குறிப்பிடத்தக்க சீருடற்பயிற்சி விளையாட்டு வீர்ர்களை இந்த உடற்பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. [3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Flourish In Suspension, Dola Mitra, 19 August 2016, Outlook.
  2. "Vivekananda Byamagar, Tripura (+91 94361 24776)". vymaps.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
  3. 3.0 3.1 3.2 "Battling odds to make name in sport". Deccan Herald (in ஆங்கிலம்). 2016-09-10. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
  4. 4.0 4.1 "Leap to gold". The Indian Express (in ஆங்கிலம்). 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.

புற இணைப்புகள்[தொகு]