விவான் சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவான் சுந்தரம்
பிறப்புமே 28, 1943(1943-05-28)
சிம்லா, சிம்லா மலை வாழிடம், பிரித்தானிய இந்தியா
இறப்பு29 மார்ச்சு 2023(2023-03-29) (அகவை 79)
புது தில்லி, இந்தியா
தேசியம்Indian
படித்த கல்வி நிறுவனங்கள்டூன் பள்ளி
மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்
ஸ்லேடு ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட், லண்டன்
வாழ்க்கைத்
துணை
கீதா கபூர்

விவன் சுந்தரம் (Vivan Sundaram, 28 மே 1943 – 29 மார்ச் 2023) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த சமகால ஓவியக் கலைஞராவார். இவரது தந்தை கல்யாண் சுந்தரம் 1968 முதல் 1971 வரை இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்தார். இவரது தாயார் இந்திரா சேர்கில் பிரபல இந்திய நவீன ஓவியக் கலைஞரான அம்ரிதா சேர்கில் என்பவரின் சகோதரியாவார். விவன் பிரபல ஓவிய வரலாற்றாசிரியரும் விமர்சகருமான கீதா கபூரை மணந்தார்.

கல்வி[தொகு]

இவர், தூன் பள்ளியிலும், வடோதரா, மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்திலும், இலண்டன் ஸ்லேடு ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட் பள்ளியிலும் நுண்கலையைப் பயின்றார். [1] [2] [3] இலண்டனில் இவர் பிரிட்டிசு-அமெரிக்க ஓவியர் ஆர்.பி. கிட்டாஜை சந்தித்து, [4] அவரின் கீழ் சில காலம் பயிற்சி பெற்றார்.

பணிகள்[தொகு]

கொச்சி-மஸ்ரிஸ் பினாலேக்காக விவன் செய்த பிளாக் கோல்ட் என்ற நிர்மாணக் கலையை பார்க்கும் மக்கள்

சுந்தரம் ஓவியம், சிற்பம், அச்சுருவாக்கம், ஒளிப்படம் எடுத்தல், நிர்மாணக் கலை, நிகழ்படக் கலை உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பணியாற்றானார்.  1980களில் இவரது படைப்புகள் அடையாள பிரதிநிதித்துவங்களை நோக்கிய போக்கைக் காட்டின. மேலும் அடையாள சிக்கல்களைக் கையாண்டன. இவரது படைப்புகள் தொடர்ந்து சமூகப் பிரச்சினைகள், பரவலர் பண்பாடு, உணர்வின் சிக்கல்கள், வரலாறு ஆகியவற்றைக் குறிக்கின்றன. நிர்மாணக் கலையுடன் பணிபுரிந்த முதல் இந்திய கலைஞர்களில் இவரும் ஒருவர். [5] இவரது சமீபத்திய நிறுவல்கள் மற்றும் நிகழ் படங்கள் பெரும்பாலும் இவரது கலை தாக்கங்களைக் குறிக்கின்றன. அவற்றில் ஆடுகுதிரைவாதம், அடிமன வெளிப்பாட்டியம், அத்துடன் சமீபத்திய பிளக்சஸ் [4] மற்றும் ஜோசப் பியூஸின் படைப்புகள் ஆகியவை அடங்கும்.

இறப்பு[தொகு]

29 மார்ச் 2023 அன்று சுந்தரம் மூளை இரத்த நாளச் சேதாரம் காரணமாக தன் 79வது வயதில் புது தில்லியில் இறந்தார்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவான்_சுந்தரம்&oldid=3691871" இருந்து மீள்விக்கப்பட்டது