விழும் பூனை

விழும் பூனை (Falling Cat) என்பது 1894 ஆம் ஆண்டு பிரெஞ்சு அறிவியலாளரான எட்டியென்-ஜூல்ஸ் மேரி தயாரித்த காலவரிசை ஒளிப்படம் ஆகும். இது 19 ஆம் நூற்றாண்டில் பாரிசில் உள்ள போயிஸ் டி பவுலோன் என்ற பூங்காவில் படமாக்கப்பட்டது. இது பிரான்சில் வெளியிடப்பட்ட மூன்றாவது படமாகும். [1] வரலாற்றில் உயிருள்ள ஒரு பூனையைக் காட்டிய முதல் திரைப்படம் இது என்று நம்பப்படுகிறது. இந்தப் படத்தில் பூனை கீழே விழுந்து அதன் கால்களால் தரையில் தொடுவதை மட்டுமே கொண்டுள்ளது. [1]
மேரி ஒரு வினாடிக்கு தொடர்ச்சியாக பன்னிரண்டு படங்களை எடுக்கக்கூடிய ஒரு ஒளிப்படமியை ஒன்று சேர்த்திருந்தார். இது ஒரு குறுகிய பீப்பாய் துப்பாக்கியை ஒத்திருந்தது. இதன் மூலம், அவர் பல்வேறு விலங்குகளின் செயலை ஆய்வு செய்தார். அவரது மிகவும் பிரபலமான ஆய்வு அவரது 'அசைபட உயிரியல் பூங்கா' ஆகும், அதில் இந்தப் பூனை எப்படி அதன் கால்களைக் கொண்டு தரையில் இலாவகமாக விழுகிறது என்பதைப் பார்ப்பதற்காக சில அடி உயரத்திலிருந்து கீழே போடப்பட்டது. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Falling Cat (1894)
- ↑ "Falling Cat (Documentary Movie) streaming video". Movie Video Streaming. 2015. Archived from the original on 21 February 2018. Retrieved 31 March 2015.