விழித்திரை விலகல்
Jump to navigation
Jump to search
விழித்திரை விலகல் (Retinal detachment) கண்ணில் ஏற்படும் ஒரு பாதிப்பாகும். விழித்திரையானது கண்ணின் உட்சுவரிலிருந்து உரிவதால் இது ஏற்படுகிறது. ஏறத்தாழ பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு இக் குறைபாடு ஏற்படுகின்றது. இக்குறைபாட்டிற்கு ஏற்ற உடனடிச் சிகிச்சை அளிக்காவிடின் பார்வையிழப்பு ஏற்படலாம்.
விழித்திரையில் சிறு துளை அல்லது கிழிவு ஏற்படுவதனாலேயே விழித்திரை விலக நேரிடுகிறது. அந்த இடைவெளியினூடாக நீர்மம் விழித்திரைக்குக் கீழே கசிவதால் கண்சுவருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தொடுப்பு நலிவடைந்து விழித்திரை உரிகிறது. இதுவே விழித்திரை விலகலாகும். இவ்வாறு விலகிய விழித்திரையால் உள்வரும் ஒளிக்கதிர்களிலிருந்து தெளிவான படத்தைப் பெற முடியாது.
இக் குறைபாடு பெரும்பாலும் நடுத்தர வயதுக் குறும்பார்வையுடையோருக்கே ஏற்படுகிறது.