விழிஞம் பன்னாட்டுத் துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விழிஞம் பன்னாட்டு ஆழ்நீர் பன்னோக்குத் துறைமுகம்
Vizhinjam International Seaport Logo.png
விழிஞம் பன்னாட்டு துறைமுகத்தின் சின்னம்
அமைவிடம்
நாடு  இந்தியா
இடம் விழிஞம், திருவனந்தபுரம், கேரளம்
ஆள்கூற்றுகள் 08°22′45″N 76°59′29″E / 8.37917°N 76.99139°E / 8.37917; 76.99139
Vizhinjam is located in இந்தியா
Vizhinjam
Vizhinjam
Vizhinjam (இந்தியா)
விவரங்கள்
நிர்வகிப்பாளர் {{{operated{{{நிர்வகிப்பாளர்}}}}}}
உரிமையாளர் கேரள அரசு
புள்ளிவிவரங்கள்
இணையத்தளம் http://www.vizhinjamport.in/

விழிஞம் பன்னாட்டுத் துறைமுகம் (Vizhinjam International Seaport) இந்தியாவின் தென்கோடி மாநிலமான கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் அரபிக்கடல் ஓரத்தில் புதியதாக கட்டமைக்கப்பட்டு வரும் துறைமுகம் ஆகும்.[1] இந்தத் திட்டப்பணிகளின் மொத்த செலவினம் மூன்று கட்டங்களில் 6595 கோடிகளாக திட்டமிடப்பட்டுள்ளது. கட்டி முடித்த பின்னர் உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக இருக்குமென மதிப்பிடப்படுகிறது.

விழிஞம் துறைமுகப் பகுதியில் பன்னாட்டு கடற்பாதையிலிருந்து 10 கடல்வழி மைல்களுக்கும் கடலோரத்திலிருந்து 1 கடல்வழி மைல் தொலைவிற்கும் இயல்பான 24 மீட்டர் ஆழம் கிடைக்கின்றது.

விழிஞம் பன்னாட்டுத் துறைமுக நிறுவனம் (VISL) முழுமையும் அரசுடைமையான (முழுமையும் கேரள அரசுக்கு உரிமையானது) நிறுவனமாகும். இது புதிய துறைமுக கட்டுமானப்பணிகளை செயற்படுத்தும் நிறுவனமாகும்.

வரலாறு[தொகு]

8 முதல் 14ஆம் நூற்றாண்டு வரை விழிஞம் பாண்டியர் நாட்டுத் துறைமுகமாக விளங்கியது. இது சங்ககாலத்தில் பாண்டியர் கீழிருந்த ஆய் நாட்டில் இருந்த தொலெமி குறிப்பிடும் எலங்கோன் நகரமே என்பது மயிலையார் கருத்து.[2] மேலும் நெடுமாறன் என்ற பாண்டியன் சேர அரசனோடு கோட்டாற்றிலும் விழிஞத்திலும் போர் செய்தானெனப் பாண்டிக்கோவை கூறுகின்றது.[3] இதில் விழிஞத்தில் நடந்தது கடற்போர் என்பது குறிப்பிடத்தக்கது.[4] சோழ அரசிடம் தோற்றபிறகு விழிஞம் துறைமுகத்தின் முக்கியத்துவம் குறையத் துவங்கிந்து. இன்றளவில் இது ஓர் மீன்பிடித் துறைமுகமாக உள்ளது.

விழிஞம் துறைமுகத் திட்டம் 25 ஆண்டுகளுக்கு முன்னதாக திட்டமிடப்பட்டது. முதலில் பொதுத்துறை தனியார் கூட்டுறவு- தனியார் சேவை பாணியில் இதனை திட்டமிட்டனர். இரண்டு சுற்று ஏலத்திற்குப் பிறகு இம்முயற்சி தோல்வியடைந்தது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Vizhinjam port". About the port. பார்த்த நாள் 7 September 2010.
  2. துறைமுகப் பட்டினங்கள் (2007). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். பக். 150. 
  3. 'விண்டார்பட விழிஞக் கடற்கோடியுள்' (இறை. உரை. செய். 30)
  4. "கவிமணியின் கவிதைகள்". www.tamilvu.org 483. www.tamilvu.org. பார்த்த நாள் ஃபிப்ரவரி 16, 2013.