உள்ளடக்கத்துக்குச் செல்

விளையாட்டிற்கான நடுவர் தீர்ப்பாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளையாட்டிற்கான நடுவர் தீர்ப்பாயம்
(in பிரெஞ்சு மொழி) Tribunal arbitral du sport
நிறுவப்பட்டது1984[1]
அமைவிடம்லோசான், சுவிட்சர்லாந்து
அதிகாரமளிப்புபன்னாட்டு ஒலிம்பிக் குழு (ஒலிம்பிக் பட்டயம்)
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடுசுவிட்சர்லாந்து ஒன்றிய உச்சநீதி மன்றம்
வலைத்தளம்www.tas-cas.org இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
தலைவர்
தற்போதையஜான் கோட்சு
பதவியில்2011
பழைய தலமையகம், லோசான், சுவிட்சர்லாந்து

விளையாட்டிற்கான நடுவர் தீர்ப்பாயம் (Court of Arbitration for Sport,CAS; பிரெஞ்சு மொழி: Tribunal arbitral du sport, TAS) 1984ஆம் ஆண்டு விளையாட்டுகள் தொடர்பான சிக்கல்களுக்கு இணக்கத்தீர்வு காணும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட பன்னாட்டு அமைப்பாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் அமைந்துள்ளது. இதன் நீதிமன்றங்கள் நியூயார்க்கு நகரம், சிட்னி, மற்றும் லோசான் நகரங்களில் அமைந்துள்ளன. தற்காலிக மன்றங்கள் அப்போதைய ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெறும் இடத்தில் நிறுவப்படுகின்றன.

இதனுடன் ஒருங்கிணைந்து விளையாட்டுகளுக்கான நடுவர் தீர்ப்பாய பன்னாட்டு மன்றம் (International Council of Arbitration for Sport, ICAS) நிறுவப்பட்டு இரண்டும் ஒரே தலைவரின் கீழ் இயங்குகின்றன. 20 பேர் அடங்கிய குழுவான இந்தப் பன்னாட்டு மன்றம் தீர்ப்பாயத்தின் நிதி மேலாண்மை மற்றும் நிதி நிறுவலுக்கு பொறுப்பு வகிக்கின்றது. இந்த மன்ற உறுப்பினர்களே விளையாட்டிற்கான நடுவர் தீர்ப்பாயத்தின் தலைமை இயக்குநரை தெரிந்தெடுக்கின்றனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "History of the Court of Arbitration for Sport". Court of Arbitration for Sport. பார்க்கப்பட்ட நாள் 5 May 2016.
  2. "Code : Statutes of ICAS and CAS". Court of Arbitration for Sport. https://www.tas-cas.org/en/icas/code-statutes-of-icas-and-cas.html.