உள்ளடக்கத்துக்குச் செல்

விளாச்சேரி ஐயப்பன் திருக்கோயில், மதுரை

ஆள்கூறுகள்: 9°53′57″N 78°04′20″E / 9.8991°N 78.0722°E / 9.8991; 78.0722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளாச்சேரி ஐயப்பன் திருக்கோயில், மதுரை
விளாச்சேரி ஐயப்பன் திருக்கோயில், மதுரை is located in தமிழ் நாடு
விளாச்சேரி ஐயப்பன் திருக்கோயில், மதுரை
விளாச்சேரி ஐயப்பன் திருக்கோயில், மதுரை
ஐயப்பன் கோயில், விளாச்சேரி, மதுரை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:9°53′57″N 78°04′20″E / 9.8991°N 78.0722°E / 9.8991; 78.0722
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:மதுரை மாவட்டம்
அமைவு:விளாச்சேரி, மதுரை
ஏற்றம்:188 m (617 அடி)
கோயில் தகவல்கள்
மூலவர்:ஐயப்பன்
சிறப்பு திருவிழாக்கள்:பங்குனி உத்திரம்
ஆனி உத்திரம் (ஐயப்பன் பிரதிட்டை செய்யப்பட்ட நாள்),
மார்கழி ஆறாட்டு விழா,
நவராத்திரி,
விநாயகர் சதுர்த்தி,
சித்திரை விஷு,
தை முதல் நாள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாரம்பரிய பாணி
வரலாறு
கட்டப்பட்ட நாள்:50 ஆண்டுகளுக்கு முன்
அமைத்தவர்:மதுரை ஐயப்பா சேவா சங்கத்தினர்

விளாச்சேரி ஐயப்பன் திருக்கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் விளாச்சேரி நகரில் அமைந்துள்ளது.[1] சிருங்கேரி ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளின் நல்லாசியுடன், மதுரை ஐயப்பா சேவா சங்கத்தினரால் உருவாக்கப்பட்டுள்ளது இக்கோயில்.[2]

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 188 மீட்டர் உயரத்தில், 9°53′57″N 78°04′20″E / 9.8991°N 78.0722°E / 9.8991; 78.0722 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு விளாச்சேரி ஐயப்பன் கோயில் அமையப் பெற்றுள்ளது.

திருவிழா[தொகு]

பங்குனி உத்திரம், ஆனி உத்திரம் (ஐயப்பன் பிரதிட்டை செய்யப்பட்ட நாள்), மார்கழி ஆறாட்டு விழா, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை விஷு மற்றும் தை முதல் நாள் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

திறக்கும் நேரம்[தொகு]

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

பிரார்த்தனை[தொகு]

கல்வியில் சிறந்து விளங்க, திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற பக்தர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு[தொகு]

ஐயப்பன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aiyappan Temple : Aiyappan Aiyappan Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.
  2. "வியாபாரத்தில் வெற்றி தரும் விளாச்சேரி ஐயப்பன்!". Hindu Tamil Thisai. 2018-01-17. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.

வெளி இணைப்புகள்[தொகு]