விளரிப்பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரிவை உணர்த்தும் பாலைப்பண்ணை விளரிப்பண் என்றும் கூறுவர். உலகை விட்டுப் பிரிந்த பெருமக்கள் மேல் இந்தப் பண் பாடப்படும். இக்காலத்தில் சாவுமேளம் கொட்டிக்கொண்டு இறந்தவரின் புகழைப் பாடுவர். இது ஆண்கள் பாடும் விளரிப்பண்.

மகளிர் இறந்தவரின் புகழைப் பாடிக்கொண்டு வைக்கும் ஒப்பாரியும் விளரிப்பண்ணே.

நெடுங்கழுத்துப் பரணர் என்னும் புலவர் துடி முழக்கத்துடன் விளரிப்பண் பாடப்பட்டதைத் தம் பாடலில் (புறநானூறு 291) குறிப்பிட்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளரிப்பண்&oldid=659544" இலிருந்து மீள்விக்கப்பட்டது