விளக்கு மாடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விளக்கு வைத்துள்ள விளக்கு மாடம்
வெறுமையான விளக்கு மாடம்

விளக்கு மாடம் என்பது, வீடுகள், மடங்கள், கோயில்கள் போன்ற பாரம்பரியக் கட்டிடங்களில் எண்ணெய் விளக்குகளை வைப்பதற்காகச் சுவர்களில் காணப்படும் குழி போன்ற அமைப்பு ஆகும். மின் விளக்குகளின் அறிமுகத்துக்கு முன்னர் கட்டிடங்களில் ஒளியூட்டுவதற்கு எண்ணெய் விளக்குகள் பயன்பாட்டில் இருந்த காலங்களில் விளக்கு மாடங்கள் அமைக்கப்பட்டன.

அமைப்பு[தொகு]

கட்டிடங்களின் தன்மையைப் பொறுத்து விளக்கு மாடங்கள் எளிமையான வடிவம் கொண்டவையாகவோ அல்லது அழகான வடிவ அமைப்புகளுடன் கூடியவையாகவோ அமைக்கப்பட்டன. விளக்குமாட அழகூட்டல்களின் தன்மை பெரும்பாலும் சுவரின் தடிப்பில் தங்கியுள்ளதால், தடிப்பான சுவர்களுடன் கூடிய பெரிய கட்டிடங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய விளக்கு மாடங்களை அமைப்பதற்கு வாய்ப்பாக அமைகின்றன. மின் விளக்குகளின் அறிமுகம், விளக்கு மாடங்களைத் தேவையற்ற கூறுகள் ஆக்கிவிட்டன. ஆனாலும், தமிழ்நாட்டின் பல இடங்களில், வாயிற் கதவின் இரு புறங்களிலும் அழகுடன் அமைக்கப்பட்ட விளக்கு மாடங்களைத் திண்ணைகளோடு கூடிய பழைய வீடுகளிலும், மடங்களிலும் இன்றும் காணலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளக்கு_மாடம்&oldid=2165398" இருந்து மீள்விக்கப்பட்டது