வில் மருத்துவமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வில் மருத்துவமுறை (Arc therapy ) ; கதிர் மருத்துவ முறையில் இதுவும் ஒரு முறையாகும். பொதுவாக புற்று நோய் திசுக்களை நோக்கி ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட புலங்களோ ஒரே புள்ளியில் விழுமாறு பல நிலைத்த (Stationary field ) புலங்களுடன் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. இது நிலைப் புல மருத்துவமுறை எனப்படும்.மிகவும் நுட்பமான எக்சு கதிர் கருவிகளும் ஐசோடோப்பு கருவிகளும் இப்போது புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப் படுகின்றன. இக்கருவிகளில் கதிர்மூலம் புற்றுநோய் திசுவினைச் சுற்றி வருமாறு அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் எப்படி சுழற்றினாலும் புலத்தின் மையக்கோடு எப்போதும் புற்றுநோய் திசுக்களின் வழியாகவே செல்லும். இப்படிப் பட்ட மருத்துவமுறை (Rotation therapy) சுழல் மருத்துவமுறை எனப்படும். அதன்னியில் புலமையக்கோடு வட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வில்லில் அங்கும் இங்கும் அசையுமாறும் மருத்துவம் செய்யப்படுமதுண்டு.இம்முறைக்கு வில் சிகிச்சை முறை என்று பெயர். இப்படிப்பட்ட முறையினால் உடலின் புறத்தோல் அதிக கதிர்வீச்சினைப் பெறுவதிலிருந்து தவிர்க்கப்படுகிறது. சில சிறப்பு உறுப்புகள் அதிக கதிர்வீச்சிலிருந்து காப்பாற்றப் படவும்முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்_மருத்துவமுறை&oldid=2745799" இருந்து மீள்விக்கப்பட்டது