உள்ளடக்கத்துக்குச் செல்

வில்ஹெம் போன் அம்போல்ட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்ஹெம் போன் அம்போல்ட்டு
தாமசு இலாரன்சால் வரையப்பட்ட ஓவியம்
பிறப்புபொட்சுதாம், புருசியா
இறப்புடெகெல், புருசியா
வாழ்க்கைத்
துணை
 கரொலைன் போன் அம்போல்ட்டு
காலம்19-ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளிபெர்லின் புத்தெழுச்சி[1]
கலை இலக்கிய மொழியியல்[2]
மரபார்ந்த தாராண்மைவாதம்
கல்விக்கழகங்கள்பெர்லின் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
மொழி ஒரு விதிசார்ந்த அமைப்பு ("மொழியின் உள் கட்டமைப்பு")
உயர்கல்விக்கான அம்போல்ட்டிய கருதுகோள்
கையொப்பம்

பிரெடிரெக் வில்ஹெம் கிறிஸ்டியன் கார்ல் பெர்டினன்டு போன் அம்போல்ட்டு (Friedrich Wilhelm Christian Karl Ferdinand von Humboldt)[a] (22 சூன் 1767 – 8 ஏப்ரல் 1835) செர்மானிய மெய்யியலாளரும் மொழியியலாளரும், அரசு அதிகாரியும் ஆவார். இவர் பெர்லின் அம்போல்ட்டு பல்கலைக்கழகத்தை நிறுவியவருமாவார். 1949ஆம் ஆண்டில் இவரது மற்றும் இயற்கை வரலாற்றாளரான இவரது தம்பி அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் நினைவாக பெர்லின் அம்போல்ட்டு பல்கலைக்கழகம் என பெயரிடப்பட்டது.

மொழியியலாளரான இவர் மொழி மெய்யியல், இனமொழியியல், மற்றும் கல்வியின் கோட்பாடு, நடைமுறை குறித்த துறைகளில் பெரும் பங்காற்றியுள்ளார். தாராண்மைவாத வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். கல்வி வழமையான கருத்துக்களை உட்புகுத்துவதை விட தானாக உள்வாங்குவதாக அமைய வேண்டும் என விரும்பினார். இதனால் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட சமூக நிலைகளிலிருந்து மீண்டு புதிய எண்ணங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கனவு கண்டார்.[6] குறிப்பாக, உயர்கல்விக்கான அம்போல்ட்டிய கருதுகோளை நிலைநிறுத்தினார். இதுவே பிரசியஅரசுப் பள்ளிகளிலும் பின்னர் ஐக்கிய அமெரிக்கா, யப்பான் நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டது. 1822-ஆம் ஆண்டில் அமெரிக்க மெய்யியல் குமுகாயத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Helmut Thielicke, Modern Faith and Thought, William B. Eerdmans Publishing, 1990, p. 174.
  2. Philip A. Luelsdorff, Jarmila Panevová, Petr Sgall (eds.), Praguiana, 1945–1990, John Benjamins Publishing, 1994, p. 150: "Humboldt himself (Humboldt was one of the leading spirits of romantic linguistics; he died in 1834) emphasized that speaking was permanent creation."
  3. "Humboldt". Collins English Dictionary. HarperCollins. Retrieved 11 July 2019.
  4. "Humboldt". Merriam-Webster Dictionary. Retrieved 11 July 2019.
  5. "Humboldt, Alexander von".. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 
  6. Edmund Fawcett, Liberalism: The Life of an Idea (2nd ed. 2018) pp. 33–48
  7. "APS Member History". search.amphilsoc.org. Retrieved 2021-04-05.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found