வில்வநாதேசுவரர் கோயில் எ. சித்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வில்வநாதேசுவரர் கோயில் திருமுதுகுன்றம்(எ)விருத்தாசலம் – சேலம் சாலையில் 12 கி.மீ வடமேற்கு திசையில் வில்வாரண்யம் என்று பஞ்சபாண்டவர்களால் பூஜிக்கப்பட்ட நல்லூருக்கு தென்கிழக்கே 3 கல் தொலைவில் சித்தர் ஒருவர் வாழ்ந்த இடமாக கருதப்படும் சித்தூர் கிராமத்தில்,ஊரின் சனிமூலையில் ஒரு லிங்கம் கண்டெடுக்கப்பட்டு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமைவாய்ந்த கோவில் இதுவாகும்.[1] இங்கு வில்வநாத ஈஸ்வரர்,நல்லநாயகி என இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.சித்தர் ஒருவர் இங்கு ஈஸ்வரனை வழிபட்டு வந்து ஐக்கியமானதால் சித்து + ஊர் =சித்தூர் என பெயர் பெற்றது.இக்கோவில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். மேலும் சித்தர் ஒருவர் சன்னாசியாக இருந்து இவ்விடத்தில் சமாதி அடைந்ததாகவும் இவ்வூரில் வாழ்ந்த பெரியவர் சன்னாசியப்பர் அருளால் நினைத்த மாத்திரத்தில் விபூதி,சாப்பாடு வரவழைத்து கொடுத்ததாக முன்னோர்களின் செவிவழிச்செய்தியாகும். சித்தூர் கிராமத்தின் தென் திசையில் அமைந்திருக்கும் சக்தி வாய்ந்த செல்லியம்மன்(எ) பிடாரி கோவில் சிறப்புடைய தலம் ஆகும். இங்கு மூலவர் மகிஷாசுரமர்த்தினி அமைந்துள்ள நிலையை வனதுர்க்கை என்று சிவச்சாரியார்கள் கூறுகின்றனர். எல்லோர்க்கும் எல்லாம் நல்கும் அம்பாள் இப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது சேலம் மாவட்ட மக்களுக்கும் குலதெய்வமாக அருள்பாலித்து வருகிறாள். இக்கோவில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்ததோடு ஏவல்,பில்லி,சூணியம் மாந்திரீகம் கற்றவர்கள் ஒரு இரவு கூட இவ்வூரில் தங்கமுடியாது என்பது முன்னோரின் செவிவழிச்செய்தியாகும்.

மேற்கோள்[தொகு]

  1. "தல வரலாறு". அறங்காவலர்கள் அச்சிட்டது.. 15/5/2014.