வில்லியம் வாலசு கேம்ப்பெல்
வில்லியம் வாலசு கேம்ப்பெல் (William Wallace Campbell) (ஏப்பிரல் 11, 1862 – ஜூன் 14, 1938) ஓர் அமெரிக்க வானியலாலர் ஆவார். இவர் 1900 முதல் 1930 வரை இலிக் வான்காணகத்தினியக்குநராக இருந்தார். இவர் கதிர்நிரலியலில் சிறப்புத் தகைமை பெற்றிருந்தார்.[1][2][3]
வாழ்க்கை
[தொகு]இவர் ஓகியோவில் உள்ள ஏன்காக் ஊரில் ஒரு பண்ணையில் பிறந்தார். இவரதந்தையார் இராபர்ட் வில்சன் ஆவார். இவரது தாயார் ஆரியத்வேல்சு கேம்ப்பெல் ஆவார். இவர் தன் ஊரில் பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு, மிச்சிகன் பல்கலைக்கழ்கத்தில் 1882 இல் சேர்ந்தார்.அங்கே கட்டிடப் பொறியியலில் அறிவியல் இளவல் பட்டம் பெற 1886 இல் சேர்ந்தார்.பல்கலைக்கழகத்தில் பயிலும்போதே சைமன் நியூகோம்பின் மக்கள் வானியல் நூலைப் படித்ததால் இவர் வானியலில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.[4]
பட்டம் பெற்றதும் இவர் கொலராடோ பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார். விரைவில் இவர் மிச்சிகனுக்குத் திரும்பிவந்து வானியல் பயிற்றுநராக வேலையில் சேர்ந்தார். இவர் 1891 இல் கலிபோர்னியாவில் உள்ள இலிக் பல்கலைக்கழகத்தில் கதிர்நிரலியலில் பணிபுரிய அழைக்கப்பட்டார். இவர் வானியல் கதிர்நிரலியலில் முன்னோடியாவார். இவர் விண்மீன்களின் ஆர விரைவுகளை அட்டவணைப்படுத்தினார். இவர் 1893 இல் வுல்ஃப்-இரேயத் விண்மீன் HD 184738 ஐக் கண்டுபிடித்தார். இது கேம்ப்பெல் நீரக உறை விண்மீன் எனவும் அழைக்கப்படுகிறது.[5][6] இவர் 1901 முதல் 1930 வரை இலிக் வான்காணக இயக்குநராகவும் பணியமர்த்தப்பட்டார். இவரது 1919 நோக்கிடுகள் பொய்த்துவிட்டதால், இவர் அவற்றை 1922 இல் மீண்டும் மேற்கொண்டார். எனவே ஆத்திரேலியாவில் இவர் 1922 இல் ஒரு குழுவுக்குத் தலைமைதாங்கிச் சூரிய ஒளிமறைப்பை ஒளிப்படம் எடுத்தார். இந்த்த் தரவுகள் ஆல்பர்ட் ஐன்சுட்டைனின் சார்பியல் கோட்டுக்கு மேலும் சான்றாக விளங்கியது. மூன்றாண்டுகளுக்குப் பின்னர், எடிங்டன் 1931 இல் அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் தலைவர் பொறுப்பை வாழ்சிங்டனில் ஏற்றார் (1931–1935).
இவர் 1923 முதல் 1930 வரை கலிபோர்னியா பல்கலைக்கழக தலைவரானார். இவர் அரிவியல் சேவைக்கான வாரியத்திலும் அறக்கட்டளைக்குழுவில்1923 முதல் 1926 வரை இருந்துள்ளார். இது இப்போது [[அறிவியலுக்கும் மக்களுக்குமான கழகம் எனப்படுகிறதுஇவர் 1895, 1909, 1918 ஆகிய ஆண்டுகளில் மும்முறை பசிபிக் வானியல் கழகத்தின் தலைவராகத் திகழ்ந்துள்ளார்.
சான்பிரான்சிசுகோவில் உள்ள நான்காம் மாடிச் சாளரத்தில் இருந்து பாய்ந்து இவர், 1923 இல் தன் 76 ஆம் அகவையில் தற்கொலை செய்து கொண்டார்.[7][8] இவர் பெரும்பாலும் பார்வையின்றி தவித்துள்லார். மேலும் இவர் பேச்சு, எழுத்து, தகவல் தொடர்புத் துண்டிப்பு நோயால் அல்லல்பட்டுள்ளார். இவர் தனது குடும்பத்துக்கு இதனால் காப்பும் பணமும் தரவியலாத, எதற்குமே பயன்படாத நிலைகண்டு நொந்து வாடியுள்ளார். இச்செய்திகள் அவரது இறப்புக் குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது. இவர் எலிசபெத் பல்லார்டு தாம்சனை மணந்துகொண்டார். இவருக்கு மூன்று மகன்கள் உண்டு. இவர்களில் ஒருவர் வான்வலவராகிய டகுலாசு கேம்ப்பெல் ஆவார்.
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]- பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்தின் இலாலண்டே பதக்கம் (1903)
- தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் என்றி டிரேப்பர் பதக்கம் (1906)[9]
- ஆசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1906)[10]
- ஜான்சன் பதக்கம் (1910)
- புரூசு பதக்கம் (1915)[11]
- இலண்டன் அரசு கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினர் [12] (1918)
- எடிபரோ அரசு கழகத்தி தகைமை உறுப்பினர் (1920)[13]
- நிலாக் குழிப்பள்ளம் கேம்ப்பெல்[14]
- செவ்வாயின் ஒரு மொத்தல் குழிப்பள்ளம் இவர் பெயர் இடப்பட்டுள்ளது.][15]
- குறுங்கோள் 2751 கேம்ப்பெல்
- பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகக் கேம்ப்பெல் முற்றம்
கேம்ப்பெல் தலைமையேற்ற குரோக்கர் தேட்டங்கள்
[தொகு]சார்லசு பிரெடரிக் குரோக்கரும் என்றி பிரெடரிக் குரோக்கரும் பல இலிக்-குரோக்கர் சூரிய ஒளிமறைப்புத் தேட்டங்களுக்கு நிதிநல்கை அளித்துள்ளனர். கேம்ப்பெல் இவற்றில் பல தேட்டங்களுக்குத் தலைமைதாங்கி வழிநடத்தினார்.[16]
- 1898 ஜனவரி 22 சூரிய ஒளிமறைப்பு,ஜேயூர், மகாராட்டிரம், இந்தியா
- 1900 மே 28 சூரிய ஒளிமறைப்பு, தோமாசுடன், ஜார்ஜியா
- 1905 ஆகத்து 30 சூரிய ஒளிமறைப்பு, அல்தாமா, இசுப்பெய்ன்
- 1908 ஜனவரி 3 சூரிய ஒளிமறைப்பு, பிளிண்ட் தீவு, கிரிபாதி
- 1914 ஆகத்து 21 சூரிய ஒளிமறைப்பு, புரோவரி, உக்கிரெய்ன்
- 1918 ஜூன் 8 சூரிய ஒளிமறைப்பு, கோல்டண்டேல், வாழ்சிங்டன்
- 1922 செப்டம்பர் 21 சூரிய ஒளிமறைப்பு, வாலால், ஆத்திரேலியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Aitken, R. G. (1938). "William Wallace Campbell, 1862-1938". Publications of the Astronomical Society of the Pacific 50: 204. doi:10.1086/124927. Bibcode: 1938PASP...50..204A.
- ↑ Moore, J. H. (1939). "William Wallace Campbell, 1862-1938". The Astrophysical Journal 89: 143. doi:10.1086/144035. Bibcode: 1939ApJ....89..143M. https://archive.org/details/sim_astrophysical-journal_1939-03_89_2/page/143.
- ↑ MNRAS 99 (1939) 317 Obituary
- ↑ Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.
- ↑ Campbell, W. W. (1894). "The Wolf-Rayet stars". Astronomy and Astro-Physics 13: 448–476 (specifically p. 461). Bibcode: 1894AstAp..13..448C. https://archive.org/details/sim_astronomy-and-astro-physics_1894-06_13_7/page/448.
- ↑ Pol Swings; Otto Struve (1940). "HD 167362, an object similar to Campbell's hydrogen envelope star". Proc Natl Acad Sci USA 26 (7): 454–458. doi:10.1073/pnas.26.7.454. பப்மெட்:16588382. Bibcode: 1940PNAS...26..454S.
- ↑ NNDB
- ↑ ""UC Presidents." University of California. University of California, 04/27/2007. Web. 1 Sep 2011". Archived from the original on 26 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Henry Draper Medal". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 19 February 2011.
- ↑ Awarding of RAS gold medal: MNRAS 66 (1906) 245
- ↑ Crawford, R. T. (1915). "Address upon the Presentation of the Bruce Gold Medal to Dr. W. W. CAMPBELL". Publications of the Astronomical Society of the Pacific 27: 153. doi:10.1086/122422. Bibcode: 1915PASP...27..153C.
- ↑ Frank Watson Dyson (1939). "William Wallace Campbell. 1862-1938". Obituary Notices of Fellows of the Royal Society 2 (7): 612–626. doi:10.1098/rsbm.1939.0021.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-01-24. பார்க்கப்பட்ட நாள் 2017-01-30.
- ↑ "Planetary Names: Crater, craters: Campbell on Moon". planetarynames.wr.usgs.gov. IAU. 2010-10-18.
- ↑ "Planetary Names: Crater, craters: Campbell on Mars". planetarynames.wr.usgs.gov. IAU. 2010-11-17.
- ↑ "List of solar eclipse expeditions". The Adolfo Stahl Lectures in astronomy, delivered in San Francisco, 1916-1917 and 1917-1918. Astronomical Society of the Pacific. 1919. p. 65.