டபிள்யூ. பி. யீட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வில்லியம் யீட்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வில்லியம் பட்லர் யீட்சு
வில்லியம் பட்லர் யீட்ஸ்
William Butler Yeats

1891ல் யீட்சு
தொழில் எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
நோபல் இலக்கியப் பரிசு
1923

வில்லியம் பட்லர் யீட்சு அல்லது வில்லியம் பட்லர் யீட்ஸ் (William Butler Yeats, சூன் 13, 1865 – சனவரி 28, 1939) ஒரு ஐரிய கவிஞர் மற்றும் நாடகாசிரியர். 20ம் நூற்றாண்டு இலக்கியத்தின் பெரும் புள்ளிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். ஐரிய மற்றும் பிரிட்டானிய இலக்கிய உலகுகளில் முக்கியமானவராக இருந்த யீட்சு அயர்லாந்தின் செனட் (நாடாளுமன்ற மேல்சபை) உறுப்பினராகவும் இருமுறை பணியாற்றியுள்ளார்.

19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளின் ஐரிய இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திடவர் இவரே. யீட்சு லேடி கிரகோரி மற்றும் எட்வார்ட் மார்ட்டினுடன் இணைந்து டப்ளினின் புகழ்பெற்ற ஆபி நாடக அரங்கை உருவாக்கினார். அரங்கின் ஆரம்பக் காலத்தில் அதன் தலைவராகவும் பணியாற்றினார். 1923ம் ஆண்டு யீட்சுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசினை பெற்ற பிறகு தங்களது மிகச்சிறந்த படைப்புகளைப் படைத்த ஒரு சில படைப்பாளிகளுள் யீட்சும் ஒருவர். டப்ளினில் பிறந்த யீட்சு தனது இளவயதில் கிரேக்க தொன்மவியல் கதைகளையும், நாட்டார் கதைகளையும் விரும்பிப் படித்தார். அவற்றின் தாக்கம் அவரது இலக்கிய வாழ்வின் முதற்கட்டத்தில் படைத்த படைப்புகள் (19ம் நூற்றாண்டின் முடிவு வரை) தெரிகிறது. 1889ம் ஆண்டு அவரது முதல் கவிதைப் படைப்பு வெளியானது. அவரது ஆரம்பகால கவிதைகளில் எட்மண்ட் ஸ்பென்சர் மற்றும் பெர்சி பைஷ் ஷெல்லி ஆகியோரின் தாக்கமும் தெரிகிறது. 20ம் நூற்றாண்டில் யீட்சு தனது இளமைக்கால கடந்தநிலைவாத (transcendentalism) கருத்துகளை விடுத்து, தனது படைப்புகளில் யதார்த்தவாதத்தை பின்பற்றத் தொடங்கினார். யீட்சு தனது வாழ்நாளின் பல்வேறு காலகட்டங்களில் தேசியவாதம், செவ்வியல் தாராண்மையியம், எதிர்வினைப் பழமைவாதம் பெருமாற்ற அழிவுவாதம் போன்ற பல்வேறு கொள்கைகளைப் பின்பற்றினார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டபிள்யூ._பி._யீட்சு&oldid=2298095" இருந்து மீள்விக்கப்பட்டது