வில்லியம் பிரைடன்
வில்லியம் பிரைடன் William Brydon | |
---|---|
![]() ஒரு இராணுவத்தின் எச்சங்கள் ஓவியம்: எலிசபெத் பட்லர் | |
பிறப்பு | அக்டோபர் 10, 1811 |
இறப்பு | 20 மார்ச்சு 1873 | (அகவை 61)
அடக்கம் | உரோசுமார்க்கி தேவாலயம் |
சார்பு | ![]() |
தரம் | உதவி மருத்துவர் |
படைப்பிரிவு | வங்காள இராணுவம் |
போர்கள்/யுத்தங்கள் | முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர், இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர், சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 |
விருதுகள் | Companion of the Order of the Bath |
வில்லியம் பிரைடன் (William Brydon; 10 அக்டோபர் 1811 – 20 மார்ச் 1873) முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போரின் போது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் இராணுவத்தில் பணியாற்றிய ஓர் ஆங்கிலேய உதவி மருத்துவர் ஆவார். 1842 ஆம் ஆண்டில் காபூலில் நடந்த போரின் போது போரில் பங்கேற்ற 4,500 இராணுவ வீரர்களில் இவர் மட்டுமே தப்பி ஜலாலாபாத் நகரை தனியனாக வந்தடைந்தவர் என்பதற்காக இவர் அறியப்படுகிறார்.
ஆரம்ப வாழ்க்கை[தொகு]
பிரைடன் இசுக்காட்டியக் குடும்பம் ஒன்றில் இங்கிலாந்தில் பிறந்தார். இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, எடின்பரோ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றார்.
தாக்குதல்[தொகு]
காபூலில் இரண்டு பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானிய இராணுவம் அங்கிருந்து 1842 சனவரியில் பின்வாங்கத் தொடங்கியது. அருகிலுள்ள பிரித்தானியப் படைப்பிரிவு 90 மைல் (140 கிமீ) தொலைவில் உள்ள ஜலாலாபாத்தில் இருந்தது, இராணுவம் மலைப்பாதைகள் வழியாகப் பின்வாங்க வேண்டும். இதற்கு சனவரி மாதப் பனி அவர்களுக்கு இடையூறாக இருந்தது.
மேஜர்-ஜெனரல் வில்லியம் ஜார்ஜ் கீத் எல்பின்சுட்டனின் தலைமையின் கீழ் 4,500 பிரித்தானிய, இந்திய வீரர்களுடன் 12,000 பொதுமக்களும் (இராணுவத்திற்கு சேவை செய்பவர்கள், அவர்களின் குடும்பத்தினர்) அவர்களுக்கு பாதுகாப்பான பாதை வழங்கப்பட்டது என்ற புரிதலின் பேரில் 1842 சனவரி 6 ஆம் நாள் ஜலாலாபாத்திற்கு புறப்பட்டனர். ஆப்கானிய பழங்குடியினர் அவர்களைத் தடுத்து அடுத்த ஏழு நாட்களில் அவர்களைத் தாக்கத் தொடங்கினர்.
இறுதிச் சமர் 1842 சனவரி 13 காலை காண்டமாக் என்ற ஊரில் பனியில் இடம்பெற்றது. இருபது அதிகாரிகளும் நாற்பத்தைந்து பிரித்தானிய வீரரும், தாங்களை ஒரு மலையடிவாரத்தில் சூழப்பட்டிருப்பதைக் கண்டனர். கேப்டன் சோட்டர், மேலும் எட்டுப் பேர் ஆப்கானியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் அல்லது வெட்டப்பட்டனர்.
காண்டமாக் இறுதிச் சமருக்கு முன்னர் முக்கிய படைப்பிரிவிலில் இருந்து பன்னிரண்டு அதிகாரிகளில் மருத்துவர் பிரைடனும் ஒருவர். இந்த சிறிய குழு புத்தேகாபாதிற்கு சென்றது, ஆனால் ஆறு பேர் தப்பித்தபோது பாதி பேர் அங்கேயே கொல்லப்பட்டனர். இவர்கள் கொன்டு வந்திருந்த குதிரைகளும் கொல்லப்பட்டதால், பிரைடனைத் தவிர மற்ற அனைவரும் ஒவ்வொருவராக சாலையில் கொல்லப்பட்டனர்.[1] 1842 சனவரி 13 பிற்பகலில், ஜலாலாபாதில் உள்ள பிரித்தானியப் படையினர் நகர எல்லையில் ஒரு உருவம் குதிரையில் வருவதைக் கண்டனர். மருத்துவர் பிரைடனின் மண்டை ஓட்டின் ஒரு பகுதி வாளால் வெட்டப்பட்டிருந்தது, மேலும் அவர் கடுமையான குளிர்ந்த காலநிலையை எதிர்த்துப் போராடுவதற்காக "பிளாக்வுட் இதழின்" பக்கங்களை தனது தொப்பியில் அடைத்து வந்திருந்ததால் உயிர் தப்பினார்.[2]
இச்சமரில் பிரைடன் மட்டுமே உயிர் தப்பியதாக நம்பப்பட்டாலும்,[3] உண்மையில், 115 பேர் (படைகள், மற்றும் குடும்பத்தினர்) கைது செய்யப்பட்டௌ போர்க்கைதிகளாக வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.[4] இவர்களில் சர் ராபர்ட் சேல் என்பவரின் மனைவி "லேடி சேல்" என்பவரும் ஒருவர். பிரைடனின் அறிக்கையின் படி, பேனசு என்ற கிரேக்க வணிகரும் உயிர் தப்பி இவருடன் சென்றிருக்கிறார், ஆனால் அவர் இரன்டு நாட்களின் பின்னரே ஜலாலாபாத் அடைந்து அடுத்த நாள் இறந்து விட்டார். இவர்களை விட சில இந்திய சிப்பாய்கள் கால்நடையாக அடுத்தடுத்த வாரங்களில் சலாலாபாத் சென்ரடைந்தார்கள். அவிதார் சீதாராம் என்ற சிப்பாய் 21 மாதங்கள் ஆப்கானியருக்கு அடிமையாக இருந்து அங்கிருந்து தப்பி தில்லி வந்து சேர்ந்தார்.[5] காபூல் பின்னர் சர் ஜார்ஜ் பொலொக் என்பவரின் இராணுவத்தினரால் கைப்பற்ரப்பட்ட போது ஏறத்தாழ 2,000 சிப்பாய்களும் மேலும் சில பொதுமக்களும் காபூலில் கண்டுபிடிக்கப்பட்டு, அழைத்து வரப்பட்டனர்.[6]
தாக்குதலுக்குப் பின்னர்[தொகு]
1852 இல் பிரைடன் இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போரில் பங்குபற்றினார். இதன் போது ரங்கூன் நகரம் கைப்பற்றப்பட்டது.[7]
1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது, பிரைடன் இலக்னோவில் வங்கால இராணுவத்தின் மருத்துவராகப் பணியாற்றினார். இவரது மனைவி, பிள்ளைகளுடன் இலக்னோ முற்றுகையின் போது (சூன் - நவம்பர் 1957) பெருத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.[8] இவரது அனுபவங்களை இவரது மனைவி கொலீனா மாக்சுவெல் பிரைடன் நூலாக எழுதி வெளியிட்டார்.
பிரைடன் 1873 மார்ச் 20 இல் இசுக்காட்லாந்து, நிக் என்ர ஊரில் காலமானார்.[7][9]
உசாத்துணைகள்[தொகு]
- Claire E. J. Herrick, "Brydon, William (1811–1873)", Oxford Dictionary of National Biography, Oxford University Press, September 2004; online edn, May 2006.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Robert Wilkinson-Latham, page 11 "North-West Frontier 1837–1947" ISBN 0-85045-275-9
- ↑ "Article in theaustralian.news.com". 14 சூலை 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 ஆகத்து 2006 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Transcripts from CNN". 7 February 2001. http://transcripts.cnn.com/TRANSCRIPTS/0109/27/se.50.html. பார்த்த நாள்: 24 August 2006.
- ↑ Linda Colley, page 350 "Captives – Britain, Empire and the World 1600–1850" ISBN 0-7126-6528-5
- ↑ Sita Ram pages 119–128 "From Sepoy to Subedar", ISBN 0-333-45672-6
- ↑ Dalrymple, William. Return of a King. The Battle for Afghanistan. பக். 387. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4088-1830-5.
- ↑ 7.0 7.1 Obituary, 14 May (1932). "Brydon's daughter, Mrs Walter Scott". Irish Times.
- ↑ "No. 22201". இலண்டன் கசெட். 16 November 1858. p. 4855.
- ↑ Heroes ... and Others, Eric H Malcolm, Cromarty History Society, 2003, ISBN 978-1-898416-74-6
வெளி இணைப்புகள்[தொகு]
- An article about William Brydon's report of the massacre
- "The first Anglo-Afghan War : Dr Brydon's report of the British defeat". 11 August 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- Elizabeth Butler (Lady Butler) The Remnants of an Army 1879, Henry Tate Collection பரணிடப்பட்டது 2011-06-07 at the வந்தவழி இயந்திரம்
- Peter McLoughlin. "William Brydon – A Lecture to the History Group". 26 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- Infobox military person image param needs updating
- Articles with FAST identifiers
- Pages with authority control identifiers needing attention
- Articles with VIAF identifiers
- Articles with WorldCat identifiers
- Articles with LCCN identifiers
- பிரித்தானிய இந்திய இராணுவ அதிகாரிகள்
- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர்கள்
- 1811 பிறப்புகள்
- 1873 இறப்புகள்
- எடின்பரோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்