வில்லியம் பார்பர் II
அருள்திரு வில்லியம் பார்பர் II | |
---|---|
பார்பர் (வலது) 2013 இல் நடந்த அறத் திங்கள் நடையின் போது பேசுகிறார் | |
பிறப்பு | ஆகத்து 30, 1963 |
தேசியம் | அமெரிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | |
பணி | சீர்திருத்தத் திருச்சபை குரு, செயற்பாட்டாளர், எழுத்தாளர் |
அமைப்பு(கள்) |
|
வில்லியம் பார்பர் II (பிறப்பு ஆகத்து 30, 1963) ஒரு சீர்திருத்தத் திருச்சபை குரு, முற்போக்குச் செயற்பாட்டாளர், அறத் திங்கள்களின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், என்.ஏ.ஏ.சி.பி யின் நோர்த் கரொலைனாவின் தலைவர், எழுத்தாளர்.
கல்வியும் குடும்பமும்
[தொகு]வில்லியம் பார்பர் அரசியல் அறிவியலில் இளநிலைப் பட்டத்தைப் பெற்றார். இறையில் கல்வியை டியூக் பல்கலைக்கழகத்திலும், பொதுக் கொள்கை மற்றும் பாதிரியார் பொறுப்பு/கவனிப்பில் (pastoral care) முதுநிலை கல்வியை டிரூவ் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.[1]
கொள்கைகளும் செயற்பாடுகளும்
[தொகு]பார்பர் ஒரு முக்கிய கிறித்தவ விடுதலை இறையியல் (liberation theology) சிந்தனையாளர், செயற்பாட்டாளர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவில் பெரும்பாலான கிறித்தவ அமைப்புகள் பழமைவாதக் கட்சியையும் கொள்கைளையும் முன்னிறுத்த, அதற்கு நேர் எதிர்மாறாக முற்போக்கான கொள்கைகளையும் செயற்பாடுகளையும் விடுதலை இறையியல் முன்வைக்கிறது. குறிப்பாக பின்வருவற்றை முன்னிறுத்துகிறார்.[2]
- தொழிலாளர் சார்பு, ஏழ்மை எதிர்ப்புக் கொள்கைகள்: அடிப்படை ஊதியம் உயர்வு, தொழிற்சங்க உரிமை, வாங்கக்கூடிய வீடு (affordable housing), பலமான சமூகப் பாதுகாப்புச் செயற்திட்டங்கள் (strong social safety net), பச்சைப் பொருளாதாரம், நியாமான குடிவரவாளர் கொள்கைகள், போர்/படைத்துறைமயாக்க எதிர்ப்பு
- கல்விக்கு சம உரிமை - எல்லோருக்கும் அணுக்கம் உடைய உயர் தர, பொது அடிப்படை மற்றும் உயர் கல்வி
- அனைவருக்கும் அணுக்கம் உடைய நலச் சேவைகள் (healthcare accessible to all), சூழலியல் பாதுகாப்பு, பெண்கள் நலம்
- நீதி முறைமையை சீரமைத்து அனைவருக்கும் நியாமானாதாக்குதல், துப்பாக்கிப் பரவலாக்கத்தை எதிர்த்தல்
- வாக்கு உரிமைகளை, பெண்கள் உரிமைகளை, ந.ந.ஈ.தி உரிமைகளை, குடிவரவாளர்கள், தொழிலாளர்கள், சமய சிறுபான்மையினர் உட்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் விரிவாக்குதல்
ஏப்பிரல் 2013 இல் இருந்து நோர்த் கரொலைனாவின் தலைநகரில் மாகாண குடியரசுக் கட்சியின் தீவர வலதுசாரி சட்டங்களை எதிர்த்து அறத் திங்கள் குடிமுறை உரிமைப் போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார்.[3] இவர் நோர்த் கரொலைனாவில் பல்வகைப்பட்ட செயற்பாட்டு அமைப்புக்களையும், பல்லினத்தவர்களையும் அமைத்து ஒரு முற்போக்கு கூட்டுகியக்கத்தை ஒருங்கிணைத்துள்ளார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dreier, Peter (October 24, 2013). "Activists to Watch: Rev. Dr. William J. Barber". Bill Moyers & Company. பார்க்கப்பட்ட நாள் 2014-07-28.
- ↑ Peter Laarman (சனவரி 2016). "A Third Reconstruction? Rev. William Barber Lifts the Trumpet". religiondispatches.org. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2016.
- ↑ Rab, Lisa (14 April 2014). "Meet the Preacher Behind Moral Mondays". Mother Jones. http://www.motherjones.com/politics/2014/04/william-barber-moral-monday-north-carolina. பார்த்த நாள்: 27 July 2014.
- ↑ Wiggins, Lori (January 1, 2011). "Rev. William Barber: The Gospel Truth". The Crisis. Archived from the original on 2015-03-29. பார்க்கப்பட்ட நாள் 2014-07-28.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)