வில்லியம் திரிச்சர்
வில்லியம் திரிச்சர் William Treacher | |
|---|---|
![]() சர் வில்லியம் திரிச்சர் | |
| பிரித்தானிய வடக்கு போர்னியோவின் 1-ஆவது பிரித்தானிய ஆளுநர் | |
| பதவியில் 26 ஆகத்து 1881 – 1887 | |
| ஆட்சியாளர் | விக்டோரியா |
| முன்னையவர் | பதவி உருவாக்கம் |
| பின்னவர் | சர் வில்லியம் குரோக்கர் |
| சிலாங்கூர் மாநிலத்தின் 6-ஆவது பிரித்தானிய முதல்வர் | |
| பதவியில் 1892–1896 | |
| முன்னையவர் | சர் வில்லியம் எட்வர்ட் மேக்ஸ்வெல் |
| பின்னவர் | சர் ஜான் பிக்கர்சிகில் ரோட்ஜர் |
| பேராக் மாநிலத்தின் 6-ஆவது பிரித்தானிய முதல்வர் | |
| பதவியில் 1896–1902 | |
| முன்னையவர் | சர் பிராங்க் சுவெட்டன்காம் |
| பின்னவர் | சர் ஜான் பிக்கர்சிகில் ரோட்ஜர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | திசம்பர் 1, 1849 வெல்லிங்டன், இங்கிலாந்து |
| இறப்பு | மே 3, 1919 |
சர் வில்லியம் ஊட் திரிச்சர் (ஆங்கிலம்; மலாய்: William Hood Treacher); KCMG (1 திசம்பர் 1849 – 3 மே 1919) என்பவர் பிரித்தானிய குடியேற்ற நிர்வாகி; நீரிணைக் குடியேற்றங்களின் பிரித்தானிய முதல்வர்; பிரித்தானிய வடக்கு போர்னியோவின் ஆளுநர்; மற்றும் லபுவான் தற்காலிக காவல்துறை நீதிபதியாகவும் பணியாற்றியவர் ஆவார்.[1]
1892 மார்ச் 10-ஆம் தேதி, கிள்ளானில் ஆங்கிலோ சீனப் பள்ளியை (Anglo Chinese School) நிறுவியவர் எனும் பெருமையையும் பெறுகிறார்..
வாழ்க்கை
[தொகு]இங்கிலாந்து, வெல்லிங்டன் நகரில் பிறந்த வில்லியம் ஊட் திரிச்சர் அவர்களின் தந்தையின் பெயர் ஜோசப் இசுகிப்பர் திரிச்சர் (Joseph Skipper Treacher).[2] தாயாரின் பெயர் பவுலின் லூயிஸ் பிளாஞ்ச் (Pauline Louise Blanche Pierret).
1871-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வழியாக லபுவானை வந்தடைந்தார். லபுவானில் தற்காலிக காவல்துறை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1843 முதல் சரவாக் இராச்சியத்தில் மருத்துவராகவும், 1848 முதல் லபுவான் பிரித்தானிய முடியாட்சியில் காலனிய அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்த ஜான் கவரோன் திரிச்சரின் (John Gavaron Treacher) என்பவர் வில்லியம் திரிச்சரின் உறவினர் ஆவார்.[1]
பதவிகள்
[தொகு]1873-இல் லபுவானின் காலனிய செயலாளராக (Colonial Secretary of Labuan) வில்லியம் திரிச்சர் நியமிக்கப்பட்டார். பின்னர் வடக்கு போர்னியோவின் முதல் ஆளுநராக (1881–1887) நியமிக்கப்பட்டார்.[3] அடுத்து சிலாங்கூர் மாநிலத்தின் 6-ஆவது பிரித்தானிய முதல்வராக (1892–1896) நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் பேராக் மாநிலத்தின் 6-ஆவது பிரித்தானிய முதல்வராக (1896–1902) நியமிக்கப்பட்டார். இறுதியாக பிரித்தானிய மலாயாவின் இரண்டாவது ஆளுநராக (1901–1904) நியமிக்கப்பட்டார்.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Treacher, W. H. (William Hood) (16 December 2008). "Sir Treacher, who served as the Secretary to the Government of Perak and had significant experience in Borneo". Project Gutenberg (in English). Retrieved 19 December 2025.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ http://www.stsepulchres.org.uk/burials/treacher_joseph.html Grave and biography of Joseph Skipper Treacher
- ↑ "Treacher is made first Governor of North Borneo". www.dailyexpress.com.my (in ஆங்கிலம்). 3 October 2020. Retrieved 19 December 2025.
- ↑ "The county families of the United Kingdom; or, Royal manual of the titled and untitled aristocracy of England, Wales, Scotland, and Ireland". 1860.
கூடுதல் சான்றுகள்
[தொகு]- Walford's County Families of the United Kingdom (1920)
- The Suffrage Annual and Women's Who's who (1913), Stanley Paul
- Treacher, Sir John (2004), Life at Full Throttle: From Wardroom to Boardroom, Pen & Sword Maritime, ISBN 978-1844151349
