வில்லியம் டி சில்வா
மதிப்புமிகு வில்லியம் டி சில்வா | |
|---|---|
| இலங்கை நாடாளுமன்றம் அம்பலாங்கொடை-பட்டிப்பலை | |
| பதவியில் 1947–1960 | |
| முன்னையவர் | இருக்கை உருவாக்கப்பட்டது |
| பின்னவர் | இருக்கை ரத்து செய்யப்பட்டது |
| இலங்கை நாடாளுமன்றம் தேர்தல் மாவட்டம்|அம்பலாங்கொடை | |
| பதவியில் மார்ச் 1960 – June 1960 | |
| முன்னையவர் | இருக்கை உருவாக்கப்பட்டது |
| பின்னவர் | பேட்ரிக் டி சில்வா குலரத்ன |
| சிலோன் நாடாளுமன்றம் தெவிநுவரை தேர்தல் மாவட்டம் | |
| பதவியில் 1965–1969 | |
| முன்னையவர் | பி. பி. விக்ரமசூரியா |
| பின்னவர் | ரோனி டி மெல் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | பெதுரு கேவாகே வில்லியம் டி சில்வா 8 திசம்பர் 1908 |
| இறப்பு | 30 சூலை 1988 (அகவை 79) |
| அரசியல் கட்சி | ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி |
| முன்னாள் மாணவர் | ஆனந்தா கல்லூரி பல்கலைக்கழகக் கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி, ஆக்ஸ்போர்டு |
| பணி | அரசியல்வாதி |
பெதுரு கேவாகே வில்லியம் டி சில்வா (William de Silva) (8 டிசம்பர் 1908 – 30 ஜூலை 1988) இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்க்சியக் கொள்கையுடைய இலங்கை அரசியல்வாதி ஆவார்.[1] இவர் இலங்கையின் அம்பலாங்கொடை அருகிலுள்ள பட்டிப்பலையின் கஹட்டப்பிட்டியாவில் செல்வந்த நிலத்தரசுக் குடும்பத்தில் பிறந்தார். [2] ஆரம்பக் கல்வியை பட்டப்பொலை கலப்பு பள்ளியில் கற்றார். பின்னர் புனித ஜான்ஸ் கல்லூரி, ரிச்மண்ட் கல்லூரி மற்றும் ஆனந்தா கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் இடைநிலைக் கல்வி பயின்றார். அதன் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகமாக உருவான பல்கலைக்கழகக் கல்லூரியில் ஒரு வருடம் கல்வி கற்றார். தொடர்ந்து மேல்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்றார்.இங்கிலாந்தில் இருந்தபோது இந்தியக் கழகத்திலும் மார்க்சியக் கல்விக்குழுவிலும் இலங்கை மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டார். பின்னர் இலங்கைக்கு திரும்பி இலங்கை சமசமாஜக் கட்சியில் சேர்ந்தார்.[3] இரண்டாம் உலகப்போரின்போது போருக்கு எதிரான இயக்கத்தில் தலைவராக செயல்பட்டதால், 1943 முதல் 1945 வரை போகம்பறை மற்றும் பதுளை சிறைகளில் அடைக்கப்பட்டார்.
1947 மற்றும் 1953 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும், அகில இலங்கை சமசமாஜ இளைஞர் கழகங்களின் துணைத்தலைவராகவும் பணியாற்றினார். 1953 ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து விலகி விப்லவகாரி லங்கா சமசமாஜ கட்சியில் இணைந்தார். பின்னர் பிலிப் குணவர்தனவுடன் சேர்ந்து மகாஜன எக்சத் பெரமுன கட்சியை நிறுவினார்.1956 முதல் 1959 வரை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டணி அரசில் தொழிற்துறை மற்றும் மீன்வள அமைச்சராக பணியாற்றினார். 1960 ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார். பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் துணைத்தலைவராகவும் இருந்தார்.[4][5] 1970 ஆம் ஆண்டு கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார்.1988 ஆம் ஆண்டு, 79 வயதில் அவர் மறைந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Glossary of People: de Silva, P.H. William (1908–1988), Marxists Internet Archive.
- ↑ W. T. A. Leslie Fernando, William de Silva revolutionised Industry and fisheries, Features, The Island Online, Sri Lanka, 2009.
- ↑ Comrade, William: Silent William, Unforgettable Personalities, Daily News, Sri Lanka.
- ↑ W.T.A. Leslie Fernando, Achievements of 1956–59 MEP regime and conflicts within, Sunday Observer, Sri Lanka.
- ↑ K. T. Rajasingham, Sri Lanka: The Untold Story — Assassination of Bandaranaike, Asia Times Online. WWW Virtual Library — Sri Lanka.