வில்லியம் இராடுகிளிப் பிர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் இராடுகிளிப் பிர்ட்(1804–1881) ஒரு 19 ஆம் நூற்றாண்டு ஆங்கிலேயப் பயில்நிலை வானியலாளர் ஆவர். இலண்டன் விக்டோரியா பூங்கா வான்காணத்தில் தூணருகே பிர்ட் நிற்கும் இந்த ஒளிப்படம் 1867 அக்தோபரில் எடுக்கப்பட்ட்து.

வில்லியம் இராடுகிளிப் பிர்ட் (William Radcliffe Birt) FRAS (1804–1881) ஒரு 19 ஆம் நூற்றாண்டு ஆங்கிலேயப் பயில்நிலை வானியலாளர் ஆவர். இவர் அரசு வானியல் கழ்கத்தின் ஆய்வுறுப்பினர் ஆவார்.[1] இவ்ர் ஜான் எர்ழ்செலுடன் பலகாலமாகப் பணிபுரிந்துள்ளார். அப்போது 1843 இலிருந்து 1850 வரை புவி வளிமண்டல அலைகள் பற்றிய வானிலையியல் ஆராய்ச்சியில் பேரளவில் ஈடுபட்டுள்ளார். இவரது பணிகளின் பெரும்பகுதி ந்மெரிக்க மெய்யியலாளர் கழகத்தின் அறிவியலார் ஆய்வுத் தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

எர்ழ்செலின் பரிந்துரை பேரில் பிர்ட் 1840 களின் பிற்பகுதியில் கியூவ் வான்காணகத்தில் பணியில் ஈடுபட்டார். கியூவ் வான்காணகத்தின் அப்போதைய இயக்குராக பிரான்சிசு உரொனல்ட்சு விளங்கினர். இவர் அப்போது பின்னவரின் விரிவான வளிமண்டல மின்சாரம், பிற வானிலை சார்ந்த நோக்கீடுகளைப் பகுப்பாய்வு செய்து வெளியிட்டார். ப்போது இருவரும் இணைந்து வளிமண்டல மேலடுக்கு வானிலைகளைப் பதிவுசெய்யவல்ல பட்ட்த்துக்கான வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளனர். பிர்ட் 1849 இன் பிற்பகுதியிலுரொனல்ட்சின் உதவியாளராக பணியமர்த்தப்பட்டார். ஆனல் சிரிது காலத்துக்குள் இருவருக்கும் இடையிலான உறவு கசக்கலானது. எனவே கியூவ் குழு 1848 இனிடையில் பிர்ட்டைப் பதவி விலகுமாறு வேண்டினர்.[2]

பிர்ட் நிலாக் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.


மேற்கோள்கள்[தொகு]

  1. "Mr W R Birt FRAS". The Cornishman (182): p. 4. 5 January 1882. 
  2. Ronalds, B.F. (2016). Sir Francis Ronalds: Father of the Electric Telegraph. London: Imperial College Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-78326-917-4. 

மேலும் படிக்க[தொகு]

  • Forbes, Eric (1970–80). "Birt, William Radcliff". Dictionary of Scientific Biography 2. நியூயார்க்: Charles Scribner's Sons. 147. ISBN 978-0-684-10114-9. 
  • Obituary in MNRAS, (1882), v. 42, p. 142-144.

வெளி இணைப்புகள்[தொகு]