வில்லியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வில்லியம் (William) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி கிராமத்தைச் சேர்ந்த இவர் இரண்டு முறை திருவாங்கூர்-கொச்சின் சட்ட மன்றத்திற்காகவும், மூன்று முறை சென்னை மாகாண சட்டசபைக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு காங்கிரசு வேட்பாளராக அருமனை தொகுதியில் இருந்து 1952 தேர்தலில் போட்டியிட்டு திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1954ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் இருந்து தமிழ்நாடு காங்கிரசு வேட்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1957 மற்றும் 1962 தேர்தல்களிலும் விளவங்கோடு தொகுதியில் இருந்து மீண்டும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1952 election for Travancore-Cochin assembly" (PDF). Archived from the original (PDF) on 2008-12-03. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. "Interim Election to the Travancore-Cochin Assembly – 1954" (PDF). Archived from the original (PDF) on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  3. 1957 Madras State Election Results, Election Commission of India
  4. 1962 Madras State Election Results, Election Commission of India
  5. 1967 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்&oldid=3531488" இலிருந்து மீள்விக்கப்பட்டது