உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லாளி மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லாளி மீன்
புதைப்படிவ காலம்:Eocene–present
டாக்சோடிசு ஜாகுலாட்ரிக்சு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
அக்டினோட்டெரிகீயை
வரிசை:
கிராங்கிபார்மிசு
குடும்பம்:
டாக்சோடிடே
பேரினம்:
டாக்சோடிசு

குளோகியுட், 1816
மாதிரி இனம்
லேப்ரசு ஜாகுலேட்டர்
ஜோர்ஜ் சா, 1803

வில்லாளி மீன்[1] (archerfish) என்பது நீர்நிலைக்கு அருகில் இருக்கும் மரம் செடி கொடிகளின் விளிம்பில் இருக்கும் பூச்சிகளையும், சிறிய இரைகளையும் தன் வாயிலிருந்து நீரைப் பீய்ச்சியடித்து நீரில் விழவைத்து வேட்டையாடும் தனித்துவமான இரைகௌவல் நுட்பத்திற்கு பெயர் பெற்றவையாகும். இவை பேர்சிஃபார்மீசு வெப்பமண்டல மீன்களின் ஒரு ஒற்றை வகை உயிரலகு குடும்பமாகும். இந்த குடும்பம் சிறியது. இதில் டாக்சோடிசு என்ற ஒரே பேரினத்தில் பத்து சிற்றினங்கள் உள்ளன. பெரும்பாலான வில்லாளி மீன்கள் நன்னீர் ஓடைகள், குளங்கள், நீர்த்தடங்களில் வாழ்கின்றன, ஆனால் இரண்டு அல்லது மூன்று இனங்கள் பரந்த உப்புநிலை மாற்றத்திற்கிசைவானவை ஆகும். இவை கழிமுகங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற நன்னீர் மற்றும் உவர் நீர் வாழ்விடங்களில் வாழ்கின்றன. [2] [3] இவை இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கையிலிருந்து தென்கிழக்காசியா வழியாக மெலனீசியா மற்றும் வடக்கு ஆத்திரேலியா வரை காணப்படுகின்றன. [4]

வில்லாளி மீன்கள் தட்டையான உடலைக் கொண்டுள்ளன, முதுகுத் துடுப்பிலிருந்து வாய் வரையிலான பகுதி ஒரே நேர் கோடாக இருக்கும். வாய் பகுதி நீண்டு இருக்கும். கீழ் தாடை வெளியே நீண்டு இருக்கும். இந்த மீன்கள் அளவில் மிகவும் சிறியவை, பொதுவாக சுமார் 12–18 cm (5–7 அங்) நீளம் வரை இருக்கும்., ஆனால் டி. சடாரியஸ் 40 cm (16 அங்) வரை இருக்கும்.[5]

வில்லாளி மீன்கள் மீன் காட்சிசாலையில் வளர்க்க விரும்பப்படும் மீன்கள். [6] ஆனால் அவை வழக்கமான மீன் உணவுகளை விட உயிருள்ள இரையை விரும்புவதால், சராசரி மீன் வளர்ப்பாளர்களால் உணவளிப்பதும் பராமரிப்பது கடினம்.

இரை பிடித்தல்

[தொகு]
தொங்கும் கிளையில் உள்ள பூச்சியை நோக்கி தண்ணீரைப் பீய்ச்சும் ஒரு வில்லாளி மீனின் விளக்கப் படம்
ஒரு வில்லாளி மீன் இரையை வீழ்த்தும் காணொளி

வில்லாளி மீன்கள் தங்கள் இரையை துல்லியமாக வீழ்த்தக் கூடியன. ஒரு வயது வந்த மீன் எப்போதும் முதல் முயற்சியிலேயே இலக்கை தாக்கும். அனைத்து வில்லாளி மீன் இனங்களும் இதைச் செய்கின்றன என்று கருதப்பட்டாலும், இது டி. பிளைதி, டி. சாட்டேரியஸ் மற்றும் டி. ஜாகுலாட்ரிக்ஸ் ஆகியவற்ற மட்டுமே ஆராய்ந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. [2] அவை பூச்சிகள் மற்றும் பிற இரைகளை [7] நீரின் மேற்பரப்பிற்கு மேலே 3 m (10 அடி) உயரம் வரை வீழ்த்தக்கூடியன. [8] இது அவற்றின் கூர்மையன பார்வையும் ஒரு காரணமாகும். ஆனால் அவற்றின் இரையை குறிவைக்கும்போது காற்று-நீர் வழியாக ஒளி கடந்து செல்லும்போது ஏற்படும் ஒளிவிலகலை கவனத்தில் எடுக்கும் திறனும் இதற்கு உள்ளதும் ஒரு காரணம். [9] இவை பொதுவாக கிடைமட்டத்திலிருந்து சுமார் 74° சராசரி கோணத்தில் இரையை நோக்கி நீரைப் பீய்ச்சுகின்றன, ஆனால் 45° முதல் 110° வரையிலான கோணங்களில் பீய்ச்சும்போது துல்லியம் கூடுகிறது.

ஒரு வில்லாளி மீன் தனது இரையைத் தேர்ந்தெடுக்கும்போது, அது அதன் கண்ணைச் சுழற்றுகிறது, இதனால் இரையின் பிம்பம் விழித்திரையின் உட்புறத்தில் கண்ணின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் விழுகிறது, இதன் உதடுகள் மட்டும் நீரின் மேற்பரப்பிலிருந்து வெளியே வந்து, மேலே உள்ள தன் இரையின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறது. வில்லாளி மீன் அதன் அண்ணத்தில் ஒரு சிறிய பள்ளத்தை உருவாக்கி, தன் நாக்கைக் கொண்டு ஒரு குறுகிய வாய்க்காலாக மாற்றுவதன் மூலம் இதைச் செய்கிறது. பின்னர் அதன் செவுள் உறைகளைச் சுருக்கி, வாய்கால் வழியாக தண்ணீரை வலிந்து, தன் வாய்ப் பகுதியில் இருந்து பீய்ச்சியடிக்கிறது. இதனால் இது கருவிகளை உருவாக்கி பயன்படுத்தும் சில விலங்குகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. [10] [11] இவை விடாமுயற்சியுடன் செயல்படும். முதல் முயற்சியில் தோல்வியுற்றால் பல முறை பீய்ச்சும். [12]

இளம் வில்லாளி மீன்கள் சுமார் 2.5 cm (1 அங்) இருக்கும்போது பீய்ச்சி சுடத் தொடங்குகின்றன. ஆனால் முதலில் துல்லியமற்றதாக இருக்கும். போகப் போக அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்கின்றன. [ சான்று தேவை ] இந்தக் கற்றல் காலத்தில், இவை சிறிய கூட்டமாக வேட்டையாடுகின்றன. இந்த வழியில், குறைந்தது ஒரு பீய்ச்சாவது அதன் இலக்கைத் தாக்கும் நிகழ்தகவு அதிகரிக்கிறது. [ சான்று தேவை ] 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை ஆய்வில், பயிற்சி இல்லாமல், ஒரு குழு உறுப்பினர் பீய்ச்சி சுடுவதைப் பார்ப்பதன் மூலம் வில்லாளி மீன் அவதானிப்பினால் கற்பதாகக் கண்டறியப்பட்டது:

வில்லாளி மீன் மீன் பெரும்பாலும் தண்ணீரிலிருந்து குதித்து, பிடிக்கக்கூடிய தூரத்தில் பூச்சி இருந்தால் அது குதித்து தன் வாயில் பிடிக்கும். இந்த மீன்கள் பொதுவாக நீரின் மேற்பரப்புக்கு அருகில் இருக்க விரும்புகிறன. [10]

புதிய ஆய்வுகளின்படி, நீருக்கடியில் உள்ள வண்டல் மண்ணில் உள்ள இரையை வேட்டையாட வில்லாளி மீன்கள் அவற்றின் மீது நீரைப் பீய்ச்சி அங்கிருந்து அவற்றை அகற்றி வேட்டையாடும் நுட்பத்தைக் கொண்டுள்ளன. இவை முதலில் நீருக்கு வெளியே அல்லது நீருக்கடியில் பீய்ச்சி சுடுவதில் எதைக் கற்றுக்கொண்டன என்பது தெரியவில்லை, ஆனால் இரண்டு நுட்பங்களும் இணையாக உருவாகியிருக்கலாம், ஏனெனில் ஒன்றில் மேம்பாடுகள் மற்றொன்றுக்கு மாற்றி பயன்படுத்தி இருக்கலாம். [13] இது மருவிய தகவமைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.

இனங்கள்

[தொகு]

டாக்சோடிசு பேரினத்தில் 10 சிற்றினங்கள் உள்ளன.[2][14][15][16][17][18]

டாக்சோடிசு பிளைத்தி'
  • டாக்சோடிசு பிளைத்தி பவுலஞ்சர், 1892 - clouded archerfish, zebra archerfish
  • டாக்சோடிசு சாட்டரெசு (காமில்டன், 1822) - largescale archerfish, common archerfish
  • டாக்சோடிசு ஜாகுலாட்ரிக்சு (பாலாசு, 1767) - banded archerfish
  • டாக்சோடிசு கிம்பர்லியென்சிசு ஆலன், 2004 - Kimberley archerfish, western archerfish
  • டாக்சோடிசு லோரென்ட்சு வெப்பர், 1910 - primitive archerfish
  • டாக்சோடிசு மெகோன்ஜெனிசு கோட்டெலட், & கூய், 2018
  • டாக்சோடிசு மைக்ரோலெப்பிசு குந்தர், 1860 - smallscale archerfish
  • டாக்சோடிசு ஆலிக்கோலெப்பிசு ப்ளீக்கர், 1876 - பெரும் செதில் வில்லாளி மீன்
  • டாக்சோடிசு சயாமின்சு கோட்டெலட் & கூய், 2018
  • டாக்சோடிசு சுந்தாய்கசு கோட்டெலட் & கூய், 2018

ஒரு ஒற்றை புதைபடிவ இனம், †டாக்சோடிசு பியூபோர்ட்டி சாண்டர்சு, 1934 இந்தோனேசியாவின் சுமத்ராவின் இயோசீன் சாங்காரெவாங் உருவாக்கத்திலிருந்து அறியப்பட்டது. இது நவீன வில்லாளி மீன் சிற்றினங்களை மிகவும் நெருக்கமாக ஒத்திருக்கிறது, நவீன உயிரினங்களில் இருக்கும் நான்கு அல்லது ஐந்து முதுகு முட்களுக்குப் பதிலாக ஆறு முதுகு முள்ளெலும்புகள் கொண்டுள்ளன[19]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வில்லாளி மீனின் வேட்டை இயற்பியல், கட்டுரை, ஜோசப் பிரபாகர், இந்தி தமிழ் திசை, 6 திசம்பர் 2025
  2. 2.0 2.1 2.2 Maurice Kottelat; Tan Heok Hui (2018). "Three new species of archerfishes from the freshwaters of Southeast Asia (Teleostei: Toxotidae) and notes on Henri Mouhot's fish collections". Ichthyological Exploration of Freshwaters IEF-952: 1–19. doi:10.23788/IEF-952. 
  3. Arthington, A., and McKenzie, F. "Review of Impacts of Displaced/Introduced Fauna Associated with Inland Waters. பரணிடப்பட்டது திசம்பர் 1, 2008 at the வந்தவழி இயந்திரம்" Environment Australia பரணிடப்பட்டது ஏப்ரல் 25, 2009 at the வந்தவழி இயந்திரம் Australia: State of the Environment Technical Paper Series (Inland Waters), Series 1, 1997. Accessed 2009-05-24.
  4. "WoRMS - World Register of Marine Species - Toxotidae Bleeker, 1859". www.marinespecies.org (in ஆங்கிலம்). Retrieved 2025-02-01.
  5. Johnson, G.D.; Gill, A.C. (1998). Paxton, J.R.; Eschmeyer, W.N. (eds.). Encyclopedia of Fishes. San Diego: Academic Press. p. 189. ISBN 0-12-547665-5.
  6. Arthington, A., and McKenzie, F. "Review of Impacts of Displaced/Introduced Fauna Associated with Inland Waters. பரணிடப்பட்டது திசம்பர் 1, 2008 at the வந்தவழி இயந்திரம்" Environment Australia பரணிடப்பட்டது ஏப்ரல் 25, 2009 at the வந்தவழி இயந்திரம் Australia: State of the Environment Technical Paper Series (Inland Waters), Series 1, 1997. Accessed 2009-05-24.
  7. Arthington, A., and McKenzie, F. "Review of Impacts of Displaced/Introduced Fauna Associated with Inland Waters. பரணிடப்பட்டது திசம்பர் 1, 2008 at the வந்தவழி இயந்திரம்" Environment Australia பரணிடப்பட்டது ஏப்ரல் 25, 2009 at the வந்தவழி இயந்திரம் Australia: State of the Environment Technical Paper Series (Inland Waters), Series 1, 1997. Accessed 2009-05-24.
  8. "WoRMS - World Register of Marine Species - Toxotidae Bleeker, 1859". www.marinespecies.org (in ஆங்கிலம்). Retrieved 2025-02-01.
  9. Schuster, S.; Wöhl, S.; Griebsch, M.; Klostermeier, I. (2006-02-21). "Animal Cognition:, How Archer Fish Learn to Down Rapidly Moving Targets". Current Biology (Current Biology Vol. 16, No. 4, 378–383) 16 (4): 378–383. doi:10.1016/j.cub.2005.12.037. பப்மெட்:16488871. Bibcode: 2006CBio...16..378S. https://www.nbb.cornell.edu/neurobio/department/reprints/Schuster%20et%20al.%202006.pdf. பார்த்த நாள்: 2014-05-31. 
  10. 10.0 10.1 Milius, Susan; October (2014). "Archerfish mouth reveals spit secret". Science News 186 (7): 8. doi:10.1002/scin.2014.186007005. 
  11. "WoRMS - World Register of Marine Species - Toxotidae Bleeker, 1859". www.marinespecies.org (in ஆங்கிலம்). Retrieved 2025-02-01.
  12. Arthington, A., and McKenzie, F. "Review of Impacts of Displaced/Introduced Fauna Associated with Inland Waters. பரணிடப்பட்டது திசம்பர் 1, 2008 at the வந்தவழி இயந்திரம்" Environment Australia பரணிடப்பட்டது ஏப்ரல் 25, 2009 at the வந்தவழி இயந்திரம் Australia: State of the Environment Technical Paper Series (Inland Waters), Series 1, 1997. Accessed 2009-05-24.
  13. Arthington, A., and McKenzie, F. "Review of Impacts of Displaced/Introduced Fauna Associated with Inland Waters. பரணிடப்பட்டது திசம்பர் 1, 2008 at the வந்தவழி இயந்திரம்" Environment Australia பரணிடப்பட்டது ஏப்ரல் 25, 2009 at the வந்தவழி இயந்திரம் Australia: State of the Environment Technical Paper Series (Inland Waters), Series 1, 1997. Accessed 2009-05-24.
  14. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2017). Species of Toxotes in FishBase. December 2017 version.
  15. "WoRMS - World Register of Marine Species - Toxotidae Bleeker, 1859". www.marinespecies.org (in ஆங்கிலம்). Retrieved 2025-02-01.
  16. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2017). "Toxotidae" in FishBase. December 2017 version.
  17. Girard, M G; Davis, M P; Tan, H H; Wedd, D J; Chakrabarty, P; Ludt, W B; Summers, A P; Smith, W L (2022). "Phylogenetics of archerfishes (Toxotidae) and evolution of the toxotid shooting apparatus". Integrative Organismal Biology 4 (1). doi:10.1093/iob/obac013. பப்மெட்:35814192. 
  18. "WoRMS - World Register of Marine Species - Toxotidae Bleeker, 1859". www.marinespecies.org (in ஆங்கிலம்). Retrieved 2025-02-01.
  19. Allen, Gerald R. (1978). "A REVIEW OF THE ARCHERFISHES (FAMILY TOXOTIDAE)". Rec. West. Aust. Mus. 6 (4). https://museum.wa.gov.au/research/records-supplements/records/review-archerfishes-family-toxotidae. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லாளி_மீன்&oldid=4425866" இலிருந்து மீள்விக்கப்பட்டது