வில்தாவா ஆறு
Jump to navigation
Jump to search
வில்தாவா ஆறு, செக் குடியரசின் மிக நீளமான ஆறாகும். இது பொதுவாக "செக் தேசிய நதி" என்று குறிப்பிடப்படுகிறது. வில்தாவா ஆறு 430 கிலோமீட்டர் (270 மைல்) நீளமும், சுமார் 28,090 சதுர கிலோமீட்டர் (10,850 சதுர மைல்) பரப்பளவும், போஹேமியாவில் பாதிக்கும் மேலாகவும், செக் குடியரசின் முழு நிலப்பகுதியிலும் மூன்றில் ஒரு பகுதியும் கொண்டது.[1] வில்தாவா ஆறு, பிராக் வழியாக செல்லும் போது, அது 18 பாலங்களை (பிரபலமான சார்ல்ஸ் பாலம் உட்பட) கடந்து செல்கிறது.
நீர்மின் உற்பத்தி[தொகு]
நீர் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும், நீர்மின் உற்பத்தி சக்தியை உருவாக்குவதற்கும் வில்தாவாவில் ஒன்பது நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவை: லிப்னோ, லிப்னோ II, ஹேன்வ்கோவிஸ், கோர்ன்ஸ்ஸ்கோ, ஆர்லிக், கம்யுக், ஸ்லாபி, ஸ்டெகோவிஸ் மற்றும் விரேன்.