விலங்ஙன் குன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விலங்ஙன் குன்று
திருச்சூர் வாசிகளின் பிலபல சுற்றுலா இடமான விலங்ஙன் குன்று
உயர்ந்த இடம்
உயரம்80 m (260 அடி)
பெயரிடுதல்
மொழிபெயர்ப்புവിലങന്‍ കുന്നു
பெயரின் மொழிமலையாளம்
புவியியல்
அமைவிடம்இந்தியா, கேரளம்
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தனிக் குன்று
அமைப்பியல் வரைபடம்செம்புரைக்கல் குன்று
நிலவியல்
பாறையின் வயதுசீனோசோயிக்கு, 100 to 80 mya
மலையின் வகைஉரசு முனை
ஏறுதல்
எளிய அணுகு வழிசாலை

விலங்ஙன் குன்று (மலையாளம்: വിലങന്‍ കുന്നു) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், திருச்சூர் நகரத்திற்கு அருகிலுள்ள ஆதாத் பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஒரு குன்றாகும். இந்த குன்றின் மேலிருந்து திருச்சூர் நகரம் மற்றும் திருச்சூரை ஒட்டிய வயல்வெளிகளை கண்டு களிக்கலாம். இந்த குன்றை திருச்சூர் நகரத்தின் ஆக்சிசன் ஜாடி என்று குறிப்பிடப்படுகிறது. 'விலங்ஙன் குன்னு' என்று மலையாளத்தில் அழைக்கப்படும் இந்தக் குனிறின் பெயரானது ஒரு பிழையான பெயர், ஏனெனில் 'விலங்ஙன்' என்றாலே மலை என்று பொருள். 'விலங்ஙன்' என்ற சொல்லுக்கு அடுத்து 'குன்னு' என்ற சொல்லை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. இது முதனிலைத் திராவிட மொழியிலிருந்து பெறப்பட்ட ஒரு பண்டைய மலையாள சொல் ஆகும். 1970 கள் வரை 'குன்னு' என்ற சொல்லை வருவாய்த் துறை அதிகாரிகளும், உள்ளூர்வாசிகளும் பயன்படுத்தவில்லை. இது அண்மைகால சேர்த்தலாகும். தமிழிலும் 'விலங்ஙன்' என்றால் மலை என்பதாகும். [1] [2] [3] [4] [5] [6]

நிலவியல்[தொகு]

விலங்ஙன் 8 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு செம்புரைக்கல் குன்றாகும். குனிறின் மேற்புறம் உள்ள சுமார் 5 ஏக்கர் பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 80 மீட்டர் உயரம் கொண்டது. இந்த குன்று முன்பு ஒரு இராணுவ தளமாகவும், இரண்டாம் உலகப் போரின்போது ஒரு கண்காணிப்பு முகாமாகவும் இருந்தது. [7] [8]

வசதிகள்[தொகு]

இந்த மலையில் திறந்தவெளி திரையரங்கம், குழந்தைகள் பூங்கா, குடும்பஸ்ரீ உணவகம், விலங்ஙன் மலையேறு சங்கம், அசோகவனம் சமிதி ஆகியவை உள்ளன. மலையில் கேரள சுற்றுலாத்துறை மற்றும் உஷாதி ஆகியவற்றுடன் இணைந்து விலங்ஙன் மலையேற்ற சங்கத்தாலும், அசோகவனம் சமிதியாலும் பராமரிக்கப்படும் அசோகவனம் என்ற மூலிகைத் தோட்டம் உள்ளது. அமலா மருத்துவமனைக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் இருந்து மலையின் உச்சியில் செல்லும் பாதை தொடங்குகிறது. [9] இந்த மலை காலை 07.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை திறந்திருக்கும். [10] [11]

விலங்ஙன் குன்றில் ஒரு கலை வேலைப்பாடு
குழந்தைகள் பூங்கா

குறிப்புகள்[தொகு]

  1. "Vilangan Hills, Thrissur". Mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-09.
  2. "Places to visit". Indiashotels. பார்க்கப்பட்ட நாள் 2012-06-09.
  3. "Attractions". DreamCity. Archived from the original on 2012-06-21. பார்க்கப்பட்ட நாள் 2012-06-09.
  4. "Vilangan Hills" (PDF). LuLu. பார்க்கப்பட்ட நாள் 2012-06-09.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Vilangankunnu". DTPC Thrissur. பார்க்கப்பட்ட நாள் 2012-06-09.
  6. "THRISSUR, The Cultural Capital". PRD, Kerala. Archived from the original on 2012-03-19. பார்க்கப்பட்ட நாள் 2012-06-09.
  7. "Vilangan Trekers Club". Manoramaonline.com. Archived from the original on 2014-06-09. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
  8. "Vilangan Kunnu". Thrissur DTPC. Archived from the original on 2014-06-06. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
  9. "Asoka saplings planted at Asokavanam in memory of Sukumar Azhikode". Asianetindia. Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
  10. "Vilangan Trekers Club". Manoramaonline.com. Archived from the original on 2014-06-09. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
  11. "Vilangan Kunnu". Thrissur DTPC. Archived from the original on 2014-06-06. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்ஙன்_குன்று&oldid=3644044" இலிருந்து மீள்விக்கப்பட்டது