விலங்கு சார் ஆராய்ச்சி மற்றும் கல்வி சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விலங்கு சார் ஆராய்ச்சி மற்றும் கல்வி சங்கம்
Animal Concerns Research and Education Society
உருவாக்கம்2001 (2001)
வகைஇலாப நோக்கமற்ற நிறுவனம், அறக்கட்டளை
சேவைப் பகுதிசிங்கப்பூர்[1]
முக்கிய நபர்கள்
லூயிசு என் ஜி, நிறுவனர், முதன்மை செயல் அலுவலர்.
வலைத்தளம்acres.org.sg

விலங்கு சார் ஆராய்ச்சி மற்றும் கல்வி சங்கம் (Animal Concerns Research and Education Society ) சிங்கப்பூரிலுள்ள ஓர் அரசு சாரா விலங்கு நல தொண்டு அமைப்பாகும். சிங்கப்பூரில் உள்ள கலாச்சார, சமூக மற்றும் இளைஞர் அமைச்சகத்தில் இந்நிறுவனம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. விலங்கு நலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், விலங்கு சார்ந்த ஆராய்ச்சித் திட்டங்களையும் அவற்றின் தேவைகளையும் ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நபர்களுடன் கூட்டாளர்களாக சேர்த்துக் கொண்டு செயல்படும் வகையிலான கொள்கைகளையும் சங்கம் கொண்டுள்ளது. [2] [3] [4] [5]

வரலாறு[தொகு]

2001 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டதாரியாக இருந்தபோது லூயிசு என்ஜி விலங்கு சார் ஆராய்ச்சி மற்றும் கல்வி சங்கத்தை தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு இவர் பட்டம் பெற்றவுடன் முழுநேரமாக சங்க வேலைகளைத் தொடங்கினார். [6]

2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இச்சங்கம் அதன் வனவிலங்கு மீட்பு மையத்தில் ஒரு வனவிலங்கு சரணாலயத்தை திறந்தது. சட்டவிரோதமாக வனவிலங்கு வர்த்தகத்தில் இருந்து மீட்கப்பட்ட நில ஆமைகள், கடல் ஆமைகள் மற்றும் இகுவான்கள் உள்ளிட்ட விலங்குகள் இங்கு வளர்க்கப்பட்டன. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி இச்சங்கத்தின் சரணாலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு விலங்குகள் தங்கள் சொந்த நாடுகளில் இருக்கும் காட்டுக்கு மீண்டும் அனுப்ப காத்திருக்கின்றன. [7] [8] [9]

2004 ஆம் ஆண்டில் இச்சங்கம் புளூ என்ற வெர்வெட் குரங்கை சாம்பியா நாட்டுக்கு திருப்பி அனுப்பியது. 2006 ஆம் ஆண்டில், ஆசா என்ற இந்திய குட்டைவால் குரங்கு மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 அன்று, மலேசிய மாபெரும் ஆமையான ரகாயு, மலேசிய வனவிலங்கு அதிகாரிகளுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதுவே வெற்றிகரமாக மீண்டும் காட்டுக்குள் விடுவிக்கப்பட்ட முதல் ஊர்வன விலங்காகும். [10]

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று, மீட்கப்பட்ட ஆறு ஊர்வன விலங்குகள், நான்கு மாபெரும் ஆசிய ஆமைகள் மற்றும் இரண்டு நீள ஆமைகள் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன. சங்க நடவடிக்கைகளில் அதிக அளவிலான விலங்குகளை ஒரே நேரத்தில் அவற்றின் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பியது இதுவே முதல் முறையாகும். [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ACRES is a pioneering Singapore-based charity and Institution of Public Character". 2020-08-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Organisation Profile - Animal Concerns Research and Education Society". Charity Portal. Ministry of Culture, Community and Youth. 2018-09-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-03 அன்று பார்க்கப்பட்டது.
  3. "SPCA says 'NO' to whale sharks in Captivity" (PDF). SPCA. 30 August 2008. 2017-07-12 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-02-03 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Endangered pig-tailed macaque rehomed in Malaysia" (PDF). AVA. 24 August 2015. 3 February 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-02-03 அன்று பார்க்கப்பட்டது.
  5. Goh, Elizabeth (20 May 2015). "83% of local pet farms do not provide basic welfare for animals: ACRES". Channel NewsAsia. 2017-02-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-03 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Louis Ng Kok Kwang CV_Final" (PDF). People's Action Party. 2017-02-03 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-02-03 அன்று பார்க்கப்பட்டது.
  7. Siau, Ming En (14 November 2013). "ACRES officially opens wildlife sanctuary". Today. 2017-02-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-03 அன்று பார்க்கப்பட்டது.
  8. Siau, Ming En (2 February 2017). "Rescued giant turtle sent home to Malaysia". Today. 2017-02-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-03 அன்று பார்க்கப்பட்டது.
  9. Khew, Carolyn (2 February 2017). "Wildlife rescue group Acres sends Malaysian giant turtle back home". The Straits Times. 2017-02-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-03 அன்று பார்க்கப்பட்டது.
  10. 10.0 10.1 Koh, Esther (17 April 2018). "Acres returns six rescued reptiles back to M'sia". The New Paper. 2018-04-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 April 2018 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]