விலங்குலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Jaguar (Panthera onca palustris) male Rio Negro 2

விலங்குலகம் என்பது விலங்குகளை அவற்றின் பொதுப் பண்புகளின் அடிப்படையில் சிறு சிறு குழுக்களாக வகைப்படுத்துதல் ஆகும். இது உயிரினங்களை இனங்கண்டறிதல், விவரித்தல், பெயரிடுதல், வகைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

உயிரினங்களின் வகைப்பாடு[தொகு]

ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த அறிஞர் கரோலஸ் லின்னேயஸ் (1707-1778) வகைப்பாட்டியலின் தந்தை எனப்படுகிறார். அவர் தனது இயற்கையின் அமைப்பு (Systema Naturae)[1] என்கின்ற நூலில் உயிரினங்களை கீழ்க் கண்ட ஏழு படிநிலைகளாக வகைப்படுத்தியுள்ளார்.

 • உலகம் (Kingdom)
 • தொகுதி (Phylum)
 • வகுப்பு (Class)
 • துறை (Order)
 • குடும்பம் (Family)
 • பேரினம் (Genus)
 • சிற்றினம் (Species)
White shark
Masked tree frog Arenal
Natrix natrix (Marek Szczepanek).jpg

முதுகு நாணுள்ளவை[தொகு]

விலங்குலகத்தில் தொகுதி 9 முதுகு நானுள்ளவை ஆகும். இவைகள் 
 1. மீன்கள்(Pisces),
 2. இருவாழ்விகள்(Amphibians),
 3. ஊர்வன(Reptiles),
 4. பறப்பன(Birds) மற்றம்
 5. பாலூட்டிகள்(Mammals) வகுப்பைச் சார்ந்தவை.

முதுகு நாணற்றவை[தொகு]

விலங்குலகத்தில் உள்ள 9 தொகுதிகளில் தொகுதி 1 முதல் 8 வரை உள்ளவை முதுகு நாணற்றவை எனப்படும். ஏனெனில் இவ்வவை விலங்குகளில் உட்புற முதுகெலும்புத் தொடர் காணப்படுவதில்லை.

 1. துளையுடலிகள்
 2. குழியுடலிகள்
 3. தட்டைப் புழுக்கள்
 4. உருளைப் புழுக்கள்
 5. வளைதசைப் புழுக்கள்
 6. கணுக்காலிகள்
 7. மெல்லுடலிகள்
 8. முட்தோலிகள்

முதலியன முதுகு நாணற்றவைகள்

ஊடகங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்குலகம்&oldid=2321473" இருந்து மீள்விக்கப்பட்டது